விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ சீசன் 5 – பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்?

0
விஜய் டிவியில் 'பிக் பாஸ்' சீசன் 5 - பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்?
விஜய் டிவியில் 'பிக் பாஸ்' சீசன் 5 - பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்?
விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ சீசன் 5 – பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 8 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டிஆர்பி ரேடிங்கில் முதலிடத்தில் உள்ள பாரதி கண்ணம்மா சீரியல் நேரம் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்க உள்ளது. பிக்பாஸ் சீசன் 5 ப்ரோமோ வெளியாகி மக்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த முறை பிக் பாஸ் லோகோ பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடமும் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கனி, சுனிதா, ஜி.பி.முத்து, அபினய், நடிகை ஷகீலாவின் மகள் மிலா, நடிகை ஐஸ்வர்யா, நடிகை வடிவுக்கரசி, 90 எம்எல் பட புகழ் மசூன் சங்கர், சூஷன் ஆகியோர் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லட்சுமி அம்மாவை பார்க்க முடியாமல் கதறி அழுத கண்ணன் – பாராட்டும் விஜே தீபிகா!

இந்த நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகியுள்ளது. இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி 8 மணிக்கு மேல் ஒளிபரப்படுவதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைவருக்கும் பிடித்தமான பாரதி கண்ணம்மா சீரியல் நேரம் மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ இம்மாத இறுதியில் முடிவடையும் என்று தெரிவித்துள்ளனர்.

மீண்டும் 8 வருடங்கள் கழித்து தொடங்கும் பாரதி கண்ணம்மா சீசன் 2? வெளியான ப்ரோமோ!

அதுமட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியால், விஜய் தொலைக்காட்சியில் இரவு நேரங்களில் இதர ஷோக்களும் ஒளிபரப்பப்படலாம். அனைத்து நாடகங்களும் திங்கள் முதல் வெள்ளி வரை நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பப்படும் என்றும் தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தில் இருக்கும் சீரியல்கள் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பினால் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!