விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் லிஸ்ட் – இணையத்தில் வைரல்! உண்மையா?

0
விஜய் டிவி 'பிக் பாஸ் சீசன் 5' போட்டியாளர்கள் லிஸ்ட் - இணையத்தில் வைரல்! உண்மையா?
விஜய் டிவி 'பிக் பாஸ் சீசன் 5' போட்டியாளர்கள் லிஸ்ட் - இணையத்தில் வைரல்! உண்மையா?
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் லிஸ்ட் – இணையத்தில் வைரல்! உண்மையா?

விஜய் தொலைக்காட்சியில் இன்னும் சில நாட்களில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க இருக்கிறார்கள் என்பது பற்றிய பட்டியல் வெளியாகி உள்ளது.

‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி:

விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 100 நாட்கள் ஒருவர் ஒரு வீட்டில் இருந்து பிக் பாஸ் கூறும் டாஸ்குகளை செய்ய வேண்டும். அவ்வாறு டாஸ்குகளை சரி வர செய்பவரை மக்கள் ஒவ்வொரு முறையும் ஓட்டுகள் வழங்கி காப்பாற்றுவர். அதில் கடைசி வரை மக்கள் மனதில் இடம் பிடித்து இருப்பவர் தான் வெற்றி அடைவார். கடந்த 4 சீசன்களில் ஆரவ், ரித்விகா, முகேன் ராவ் மற்றும் ஆரி ஆகியோர் ஜெயித்தனர்.

பிரபல பெண் தொழிலதிபரை களமிறக்கும் பிக் பாஸ் – சூடு பிடிக்குமா நிகழ்ச்சி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முதல் ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் தற்போது தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை யார் யார் பங்கேற்க இருக்கிறார்கள்? என்ற தகவல் இணையத்தில் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது பங்கேற்க இருக்கும் 17 போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

தல அஜித் ‘வலிமை’ படத்தின் சூப்பர் அப்டேட் – இன்று பட காட்சிகள் வெளியீடு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘குக் வித் கோமாளி’ புகழ் கனி, சுனிதா, பயில்வான் ரங்கநாதன், தொகுப்பாளினி பிரியங்கா, சூசன் ஜார்ஜ், வடிவுக்கரசி, ஷகிலாவின் மகள் மிலா, நமிதா மாரிமுத்து, துள்ளுவதோ இளமை அபிநவ், ‘மைனா’ நந்தினி, மசூம் சங்கர், கண்மணி சீரியல் லிசா, நடிகை பானுப்பிரியா, பாய்ஸ் பட மணிகண்டன், நடிகர் கிருஷ்ணா மற்றும் ஜெமினி கணேசன் பேரன் ராமானுஜம் ஆகிய 17 போட்டியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த பட்டியலில் இருப்பவர்களில் யார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்கள் என்பது அக்டோபர் 3ம் தேதி தெரிய வரும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!