விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் – ஜிபி முத்து முதல் வடிவுக்கரசி வரை!

0
விஜய் டிவி 'பிக்பாஸ் சீசன் 5' போட்டியாளர்கள் - ஜிபி முத்து முதல் வடிவுக்கரசி வரை!
விஜய் டிவி 'பிக்பாஸ் சீசன் 5' போட்டியாளர்கள் - ஜிபி முத்து முதல் வடிவுக்கரசி வரை!
விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் – ஜிபி முத்து முதல் வடிவுக்கரசி வரை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்களின் பெயர்கள் கசிந்துள்ளது. இதில் பிரபல நடிகர் மகேந்திரன் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. வெவ்வேறு போட்டியாளர்கள் தினந்தோறும் புதிய டாஸ்க்குகள் என்று நிகழ்ச்சி எப்போதும் சுவாரசியமாகவே போகும். இதனிடையே பங்கேற்பாளர்களுடன் சண்டைகள் கருத்து வேறுபாடுகள் போன்றவைகளும் நடைபெறும். இதில் பங்கேற்பவர்கள் தங்கள் திறமையால் எளிதில் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.

“விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 சீரியல் நடிகைகள்? ஷிவானி முதல் மைனா வரை!

சீசன் 1 ல் ஓவியா, சீசன் 2 ல் லாஸ்லியா, சீசன் 4 ல் ரம்யா பாண்டியன் போன்றோர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகினர். அதன் மூலம் நிறைய பட வாய்ப்புகளையும் பெற்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மக்கள் மனதில் இடம் பெற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு வீட்டிற்குள் வருகின்றனர். தற்போது வரை நான்கு சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது சீசன் 5 வின் முன்னோட்டம் நேற்று வெளியானது.

TN Job “FB  Group” Join Now

இதில் குக் வித் கோமாளி புகழ் கனி, சுனிதா, டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து, ‘துள்ளுவதோ இளமை’ படப் புகழ் அபினய், நடிகை ஷகீலாவின் மகள் மிலா, நடிகை ஐஸ்வர்யா, நடிகை வடிவுக்கரசி, ’90 எம்எல்’ பட புகழ் மசூன் சங்கர், சூஷன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இவர்களை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய பிரபல நடிகர் மகேந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பிய போது நடிகர் மகேந்திரன் வாழ்க்கையே பிக்பாஸ் மாதிரி தான், இதில் தனியா பிக்பாஸ் வேறயா? என்று பதிலளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!