நிரூப் & பிரியங்காவை தூண்டி விடும் அபிஷேக் – விறுவிறுப்பாக வெளியான ‘பிக்பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ!

0
நிரூப் & பிரியங்காவை தூண்டி விடும் அபிஷேக் - விறுவிறுப்பாக வெளியான 'பிக்பாஸ்' சீசன் 5 ப்ரோமோ!
நிரூப் & பிரியங்காவை தூண்டி விடும் அபிஷேக் - விறுவிறுப்பாக வெளியான 'பிக்பாஸ்' சீசன் 5 ப்ரோமோ!
நிரூப் & பிரியங்காவை தூண்டி விடும் அபிஷேக் – விறுவிறுப்பாக வெளியான ‘பிக்பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ!

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர் அபிஷேக், நிரூப் மற்றும் ப்ரியங்காவிடம் வெறிகொண்டு பேசுவது போல இன்றைய நாளுக்கான 3வது ப்ரோமோ ஒன்று வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

பிக்பாஸ் ப்ரோமோ

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக குறைந்திருந்த ஸ்வாரசியத்தை கூட்டும் விதமாக சென்ற வாரத்தில் மட்டும் 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் புதிதாக களமிறக்கப்பட்டுள்ளனர். இதில் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் அபிஷேக் மீண்டுமாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பது பார்வையாளர்கள் மத்தியில் விறுவிறுப்பை கூட்டி இருந்தது. ஏனென்றால் இந்நிகழ்ச்சி துவங்கிய முதல் வாரங்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஏற்பட்ட ஏகப்பட்ட கலாட்டாக்களுக்கு காரணமாக இருந்த அபிஷேக் மீண்டுமாக இந்த வீட்டுக்குள் நுழைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாகி இருந்தது.

ஓய்வூதியதரார்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய தகவல் தொழில் நுட்பம் அறிமுகம்!

ஆனால் தனது 2வது வாய்ப்பை மிகவும் பொறுமையாக கையாண்டு வந்த அபிஷேக் தற்போது தனது கொளுத்தி போடும் வேலையே மீண்டுமாக துவங்கி இருக்கிறார். அந்த வகையில் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான 3வது ப்ரோமோவில் அபிஷேக், ப்ரியங்கா மற்றும் நிரூப்புடன் பேசி கொண்டிருக்கிறார். அதாவது, உன்னை சிங்கம் என வெளியில் அவ்வளவு பில்டப் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். நீ போறது என்றால் இப்போதே கிளம்பி போ. பாவனியை இந்த முறை கேப்டன்ஸி பொறுப்பை எடுக்க சொல்லி விட்டு அண்ணாச்சியை காயப்படுத்தாமல் அடுத்த முறை தள்ளி இருக்கலாமே.

தமிழகத்தில் நாளை (டிச.2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

உனக்கு இந்த 7 நாள் சலுகை வேணுமா. அன்பு கொடுப்பதில் லாஜிக் பார்க்கிறாயா. நிரூப், ப்ரியங்கா என இதையே பேசிக்கொண்டிருக்க போரடிக்கிறது. நான் இருக்கும் போதும் இதை தான் பேசிக்கொண்டிருந்தீர்கள். இப்போது 60 நாள் ஆச்சு. இப்போதும் இதேயே தான் பேசுறீங்க. மக்கள் எனக்கு பிச்சை போட்ருக்காங்க. அவங்க எதிர்பார்க்கும் ஸ்வாரஸ்யத்தை என்னை கொளுத்திட்டு கொடுப்பேன் என பேசுகிறார். அபிஷேக்கின் இந்த பேச்சை கேட்கும் போது, கண்டிப்பாக ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் அடுத்தடுத்த எபிசோடுகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here