சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8ல் ரீஎன்ட்ரி கொடுத்த “பிக்பாஸ்” பிரியங்கா – ப்ரோமோ ரிலீஸ்!

0
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8ல் ரீஎன்ட்ரி கொடுத்த
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8ல் ரீஎன்ட்ரி கொடுத்த "பிக்பாஸ்" பிரியங்கா - ப்ரோமோ ரிலீஸ்!
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8ல் ரீஎன்ட்ரி கொடுத்த “பிக்பாஸ்” பிரியங்கா – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் ரன்னர் ஆன தொகுப்பாளினி பிரியங்கா தற்போது மீண்டும் தனது ஆங்கர் பணிக்கு திரும்பி இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் பிரியங்கா:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் அதில் 18 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள். இந்த சீசன் கடந்த சீசன்களை போல இல்லாமல் கொஞ்சம் புது விதமாக இருந்தது. காரணம் ஒரு சிலரை தவிர பல போட்டியாளர்கள் முன் பின் அறிமுகம் இல்லாமல் இருந்தது தான். அதனால் போட்டியாளர்கள் குறித்த யூகம் மக்கள் மத்தியில் இல்லாமல் இருந்தது தான். மேலும் இந்த சீசனின் டைட்டில் வின்னராக சின்னத்திரை நடிகர் ராஜு தேர்வு செய்யப்பட்டார்.

‘பிக் பாஸ்’ அபிராமிக்காக லாஸ்லியா செய்த காரியம் – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அவருக்கு அடுத்ததாக தொகுப்பாளினி பிரியங்கா ரன்னராக தேர்வு செய்யப்பட்டார். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாள் முதல் ஒரு அன்பான போட்டியாளராக இருந்தார். இருந்தாலும் அவர் அபிஷேக் உடன் சேர்ந்து பேசியதால் ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. பிரியங்காவின் சிரிப்பை மட்டுமே பார்த்த ரசிகர்கள் முதன் முறையாக பிரியங்காவின் அழுகை, கோபம், சண்டை என அனைத்தையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே சித்ராவின் வளைகாப்பு விழா – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இந்நிலையில் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதால் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கினார். மேலும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் அதில் பிரியங்கா இல்லாமல் ரசிகர்கள் வருத்தப்பட்டனர். இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிரியங்கா வர இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிரியங்காவை பார்த்த சூப்பர் சிங்கர் போட்டியாளரான சிறுமி ஒருவர் அழுகிறார். இதை பார்த்த பிரியங்காவும் அழுகிறார். அதை பார்த்து இது தான் பிரியங்காவின் உண்மை குணம் என பலர் தெரிந்து கொண்டு இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here