‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழைந்த சஞ்சீவ், நடிகர் விஜய் பிக் பாஸ் பார்க்கிறாரா? அவர் சொன்ன பதில் இதுதான்!

0
'பிக் பாஸ்' வீட்டிற்குள் நுழைந்த சஞ்சீவ், நடிகர் விஜய் பிக் பாஸ் பார்க்கிறாரா? அவர் சொன்ன பதில் இதுதான்!
'பிக் பாஸ்' வீட்டிற்குள் நுழைந்த சஞ்சீவ், நடிகர் விஜய் பிக் பாஸ் பார்க்கிறாரா? அவர் சொன்ன பதில் இதுதான்!
‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழைந்த சஞ்சீவ், நடிகர் விஜய் பிக் பாஸ் பார்க்கிறாரா? அவர் சொன்ன பதில் இதுதான்!

விஜய் டிவியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அடுத்த படியாக ஒரு போட்டியாளர் சஞ்சீவ் வைல்டுக்கு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார். இதை பற்றிய ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

விஜய் டிவி என்றாலே பிரமாண்டம் தான். ஆனால் அதற்கெல்லாம் மகுடம் சூட்டும் விதமாக அதிக பிரம்மாண்டத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் பட்டி, தொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ளது. உலக நாயகனின் தொகுப்பும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலர் மக்கள் மத்தியில் தற்போது அதிக கவனத்தை பெற்றுள்ளனர். புதியதாக கலைத்துறைக்கு வந்தவர்களும் சரி, பல வருடங்களாக திரைத்துறையில் இருந்தும் அதுவரை வெற்றியை ருசிக்காத பலரும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, அதிக வாய்ப்புகள் கிடைத்து மிகவும் பிசியாக நடித்து வருகின்றனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லைக்கு நாளை பிறந்தநாள் – CDP ரிலீஸ்! ரசிகர்கள் வாழ்த்து!

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வமாக உள்ளனர். போட்டியாளருக்கு வாரத்திற்கு இவ்வளவு சம்பளம் என்று உள்ளதால், வருமானமும் ஆயிற்று, மக்கள் மத்தியில் பிரபலமும் கிடைத்து விடுவதும் இதற்கு காரணமாக உள்ளது. இந்த முறை சீசன் 5 நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக துவங்கியது, தற்போது கலகலப்பு என்பது மறைந்து கலவரமாக உள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்காக பாதி நாட்களில் வைல்டு கார்டு எண்ட்ரியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். கடந்த வாரத்தின் இறுதியில், இந்த சீசனில் வந்து முன்னதாக எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் வந்துள்ளார். அதன்பிறகு, அமீர் என்ற நடன இயக்குனர் வைல்டு கார்டு போட்டியாளராக வந்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் லட்சுமி அம்மா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

இந்நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவில், புதிதாக ஒருவர் வீட்டிற்குள் வருவது போல் கட்டப்பட்டது. தற்போது 2ம் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், அடுத்த வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகர் சஞ்சீவ் வந்துள்ளார். இவரை பார்த்த உடன் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். சஞ்சீவ் மிகவும் கலகலப்பாக அனைவரிடமும் பேசுகிறார். அப்போது, சிபி, சஞ்சீவிடம் நடிகர் விஜய் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறாரா என்று கேள்வியை எழுப்புகிறார். அதற்கு சஞ்சீவ் விஷமத்துடன் சிரிப்பது போல் ப்ரோமோ முடிந்துள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆர்வமும் எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!