‘பிக் பாஸ்’ அபிராமிக்காக லாஸ்லியா செய்த காரியம் – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
'பிக் பாஸ்' அபிராமிக்காக லாஸ்லியா செய்த காரியம் - வைரலாகும் பதிவு! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
'பிக் பாஸ்' அபிராமிக்காக லாஸ்லியா செய்த காரியம் - வைரலாகும் பதிவு! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
‘பிக் பாஸ்’ அபிராமிக்காக லாஸ்லியா செய்த காரியம் – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தற்போது ‘பிக் பாஸ்’ அல்டிமேட் வீட்டில் வைத்து லாஸ்லியா குறித்து அபிராமி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீஷேர் செய்திருக்கிறார் லாஸ்லியா. இப்போது இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள புரிதலை கண்டு ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

பிக் பாஸ் அபிராமி

‘பிக் பாஸ்’ சீசன் 3ல் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார் இருவரும் இப்போது ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரே சீசனை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அப்போதும் சரி, இப்போதும் சரி இவர்களுக்குள் பரஸ்பரமான பேச்சு என்பது இருந்ததில்லை. அதுவும் இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி மற்றும் வனிதாவுக்கு இடையே ஒரு மோதல் போக்கு உருவாகி இருக்கிறது. குறிப்பாக வனிதா காஃபி கேட்டு பிக் பாஸிடம் அடம்பிடிக்கும் போது, டாஸ்க் ஒன்றில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் காஃபி பவுடரை கேட்டு வாங்குகின்றனர்.

சன் டிவி “சுந்தரி” சீரியல் கதாநாயகி கேப்ரில்லா வாழ்வில் முக்கிய தருணம் – குவியும் வாழ்த்துக்கள்!

இப்படி இருக்க ‘பிக் பாஸ்’ கொடுத்த காஃபி பவுடரை எடுத்து தனக்கு மட்டும் வைத்துக்கொள்ள போவதாக சொல்லிவிட்டு எடுத்து செல்கிறார் வனிதா. இதனால் கோபமடையும் அபிராமி, இப்படி செய்வது நல்லதில்லை வனிதா அக்கா. இது பிக் பாஸ் கொடுத்தது. எல்லாருக்கும் பொதுவானது என்று சொல்கிறார். ஆனால் நாங்கள் தானே டாஸ்க் வின் பண்ணி அந்த காஃபி பவுடரை வாங்கினோம். அதனால் அதை நான் தான் வைத்துக்கொள்வேன் என்று விதண்டாவாதம் பேசுகிறார் வனிதா. ஒரு கட்டத்தில் பேச்சு வார்த்தை முற்றிப் போக எனக்கு எதுவும் வேண்டாம் என்று காஃபி பவுடரை வீசி விட்டு செல்கிறார் வனிதா.

இதற்கிடையில் மீண்டும் பிரஸ் மீட் டாஸ்கில் வனிதா மற்றும் அபிராமிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, அபிராமி மற்றும் பாலாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும் போது வனிதா குறுக்கிட, யாரும் இந்த விஷசயத்தில் பேசத்தேவையில்லை என்று வனிதாவை பேச விடாமல் நிறுத்துகிறார் அபிராமி. தொடர்ந்து பிரஸ் நபர்கள் ஜுலியை பார்த்தால் ஜெனிலியா, ஓவியா மாதிரி இருக்கிறது என்று கிண்டல் செய்ய, அது ஏன் லாஸ்லியா மாதிரி இல்லையா என்று வனிதா சொல்கிறார்.

அதற்கு, நீங்கள் ஏன் லாஸ்லியா பேரை இழுக்கிறீர்கள். அவர் இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் இல்லை. அதனால் அவர் பெயரை இழுக்க வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்கிறார் அபி. தொடர்ந்து பிரஸ் மீட்டில் லாஸ்லியா பற்றி பேசிய அபிராமி, ‘பிக் பாஸ்’ சீசன் 3ல் எனக்கும், முகேனுக்கும் பிரச்சனை வந்தபோது முகேன் டேபிளை உடைத்து கையில் ரத்தம் வந்தது. அப்போது, எல்லாரும் முகேனிடம் சென்று விசாரிக்கையில், லாஸ்லியா மட்டும் தான் என்னிடம் வந்து பேசினார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே சித்ராவின் வளைகாப்பு விழா – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

அவரை நான் என் மனசில் வைத்திருக்கிறேன் என்று அபிராமி நெகிழ்ச்சியாக கூறி இருக்கிறார். இந்த பதிவை அபிராமி ரசிகர்கள் தங்களது வலைதள பக்கத்தில் ஷேர் செய்ய, அதனை ரீஷேர் செய்த லாஸ்லியா அபிராமிற்கான தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்போது, லாஸ்லியா மற்றும் அபிராமியின் இந்த அக்கா, தங்கை கோல்ஸ் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!