திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் ஜூலி – வைரலாகும் புகைப்படம்!

0
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் ஜூலி - வைரலாகும் புகைப்படம்!
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் ஜூலி - வைரலாகும் புகைப்படம்!
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் ஜூலி – வைரலாகும் புகைப்படம்!

பிக் பாஸ் சீசன் 1 ன் மூலமாக பிரபலமான ஜூலி தற்போது ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. எதற்காக ஜூலிக்கு ஆபரேஷன் நடந்தது என்பதற்கான தகவலையும் ஜூலி அறிவித்துள்ளார்.

பிக் பாஸ் ஜூலி:

பிக் பாஸ் சீசன் 1 ன் மூலமாக பிரபலமானவர் தான் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜூலி பங்கேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார். இதற்கு பிறகு தான் ஜூலிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஜூலிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் வெறுப்பை மட்டுமே சம்பாதித்து வந்தார். பிக் பாஸ் சீசன் 1ல் ஓவியாவிடம் மல்லுக்கட்டி கொண்டிருந்தார்.

Exams Daily Mobile App Download

பிக் பாஸ் வீட்டை விட்டு ஜூலி வெளியேறிய பிறகும் கூட ரசிகர்கள் ஜூலியை வறுத்தெடுத்து கொண்டிருந்தனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி பல மாதங்கள் யார் கண்ணிலும் படாமல் ஒளிந்து இருந்தார். பின்பு, எப்போதும் போல சமூக வலைப்பக்கங்களில் உலாவ ஆரம்பித்துவிட்டார். இதனையடுத்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் 14 போட்டியாளர்களில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். சீசன் 1 போல இல்லாமல் நான் நானாக இருக்க வந்திருக்கிறேன் என கூறி வந்தார். இருப்பினும், ரசிகர்களின் வெறுப்பை மட்டுமே சம்பாரித்தார்.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய விதிகள் அறிமுகம்!

கிட்டத்தட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பல நாட்கள் தாக்குப்பிடித்தார். தற்போது மருத்துவமனையில் ஜூலி இருப்பது போன்றும், ஜூலிக்கு ஆபரேஷன் நடைபெற்றது போலவும் ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் ஜூலிக்கு என்னாச்சு என பதட்ட நிலையில் இருந்தனர். இந்நிலையில், ஜூலி எதற்காக ஆபரேஷன் செய்துள்ளார் என்பதற்கான விளக்கமும் அளித்துள்ளார். அதாவது, கண்ணில் ஆபரேஷன் செய்துள்ளதாகவும், தன்னை அக்கறையாக விசாரித்ததற்கு நன்றி எனவும் கூறி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here