குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகிய பிக்பாஸ் நடிகை கேபி வாங்கிய புது கார் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

0
குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகிய பிக்பாஸ் நடிகை கேபி வாங்கிய புது கார் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகிய பிக்பாஸ் நடிகை கேபி வாங்கிய புது கார் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகிய பிக்பாஸ் நடிகை கேபி வாங்கிய புது கார் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகிய கேபிரில்லா தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வாங்கியுள்ள புதிய காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கேபிரில்லா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஜோடியின் ஆறாவது சீசனில் கலந்து கொண்டு மீடியாவில் அறிமுகமாகியவர் தான் கேபிரில்லா . இவர் சிறந்த டான்சர் என்பது அந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏனென்றால் அந்த சீசனில் வின்னரும் கேபிரில்லா தான். அதே போன்று 7ம் வகுப்பு சி பிரிவு என்கிற விஜய் டிவி தொடரிலும் இவர் குழந்தை பாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகிய கேபி வெள்ளித்திரையில் நடிகர் தனுஷ் நடித்த 3 படத்தில் ஹீரோயின் ஸ்ருதியின் தங்கையாக நடித்து தனக்கென முத்திரையை பதித்தார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் இருந்து விலகும் முல்லை காவ்யா – ரசிகர்கள் ஷாக்!

அடுத்ததாக சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களிலும் நடித்து அசத்தினார். அதன் பிறகு அவர் எங்கு போனார், என்ன செய்கிறார் என்ற எந்த தகவல்களும் இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் விஜய் டிவி ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் சிறந்த முறையில் அவர்களது கேரியரில் கொடிகட்டி பறந்து தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் கேபியும் தற்போது விஜய் டிவியின் டாப் தொடரான ஈரமான ரோஜாவே 2 தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கேபி அவரது தனி திறமையின் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தற்போது சொந்தமாக ஒரு புது கார் வாங்கி உள்ளார். அப்போது காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதில் டாடா ஹாரியர் டார்க் எடிசன் காரை வாங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் இன்ஸ்டாவில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த காரின் விலை 25 லட்சத்துக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here