விஜய் டிவியில் விரைவில் “ஈரமான ரோஜாவே” சீசன் 2 – கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம்!
விஜய் டிவி “ஈரமான ரோஜாவே” சீரியல் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருந்தது. இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரமான ரோஜாவே:
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் பல முன்னணி சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்று தான் ஈரமான ரோஜாவே சீரியல். இந்த சீரியல் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென இந்த சீரியல் முடிவுக்கு வந்ததாக அறிவித்ததை தொடர்ந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சீரியல் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பின் தான் சீரியலுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என தெரிய வந்தது.
தமிழகத்தில் நாளை (டிச.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதனால் இந்த சீரியல் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. முதல் சீசனில் கதாநாயகனாக இருதயம் மற்றும் கதாநாயகியாக பவித்ரா என்பவர் நடித்து வந்தார். இவர்களுடன் சியாம், சாய் காயத்ரி ஆகியோர் நடித்தனர். இந்த சீரியலை பிரான்சிஸ் கதிரவன், ரிஷி, மற்றும் ரவி பிரியன் ஆகியோர் இயக்கியுள்ளனர். சீரியல் கதாநாயகி மலர் வாழ்க்கையில் நடக்கும் ஏற்ற தாழ்வுகள் பற்றி கதை இருக்கிறது. பிரிந்த இரண்டு குடும்பத்தை சேர்த்து வைக்க மலர் மற்றும் மாறன் காதல் செய்கின்றனர்.
ஆனால் திருமணத்திற்கு முதல் நாள், மாறன் ஒரு விபத்தில் இறக்கிறான். மேலும், சூழ்நிலை காரணமாக மாறனின் தம்பி வெற்றியை திருமணம் செய்து கொள்கிறார் மலர். அதனால் இருவரும் பிடிக்காமல் திருமணம் செய்து தங்களது வாழ்க்கையை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்பதே கதையாக இருந்தது. இந்நிலையில் இந்த சீரியல் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம் கேப்ரியலா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.