மருத்துவமனையில் கால் வலியால் துடிக்கும் “பிக்பாஸ் அமீர்” – வைரல் வீடியோ! ரசிகர்கள் வேண்டுதல்!

0
மருத்துவமனையில் கால் வலியால் துடிக்கும்
மருத்துவமனையில் கால் வலியால் துடிக்கும் "பிக்பாஸ் அமீர்" - வைரல் வீடியோ! ரசிகர்கள் வேண்டுதல்!
மருத்துவமனையில் கால் வலியால் துடிக்கும் “பிக்பாஸ் அமீர்” – வைரல் வீடியோ! ரசிகர்கள் வேண்டுதல்!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்து மக்கள் மத்தியில் பிரபலமான போட்டியாளரான நடன இயக்குனர் அமீர் அவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது காலில் அடிபட்டது. தற்போது வலி தாங்க முடியாமல் மருத்துவமனையில் அவர் வலியால் துடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் அமீர்:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. சமீபத்தில் முடிந்த ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிவர் தான் நடன இயக்குனர் அமீர். அவருடைய சொந்த ஊர் ஊட்டி. அவர் ஊட்டியில் நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளில் பிரபலங்களுக்கு அவர் நடனம் சொல்லி கொடுத்து இருக்கிறார்.

தமிழக அரசின் 108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ.14,964/- உடனே விரையுங்கள்!

இவர் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டு 50 நாட்களுக்கு பின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார். வந்த சில வாரங்களாக அவருக்கு சொல்லும்படியான புகழ் இல்லாமல் இருந்தாலும் டாஸ்க் என வந்தால் அவருடைய முழு முயற்சியும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய வாழ்க்கை கதையை சொன்னதில் அவருடைய அம்மாவின் இழப்பு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது. அதன் பின் அவருக்கு தனியாக ரசிகர் பட்டாளமே கிளம்பியது.

மேலும் பிக்பாஸ் வீட்டில் பாவ்னி உடன் அவர் செய்த காதல் காட்சிகள் அனைத்துமே மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ராஜு உடன் விளையாடும் போது அவருக்கு காலில் அடிபட்டது. அவர் ஏற்கனவே கார் விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது நிகழ்ச்சி முழுவதும் அவர் காலில் கட்டுடன் இருந்தார்.

தீ விபத்தில் தப்பிய சீரியல் நடிகர் ஸ்ரீ உருக்கம் – ‘உண்மையான தேவதைகள்’ தீயணைப்பு வீரர்கள் தான்!

அதன் பின் அவர் சமீபத்தில் பிக்பாஸ் கொண்டாடட்டம் நிகழ்ச்சியில் நடனம் ஆட முடியமால் வலியால் தவித்தார். இந்நிலையில் அவர் கேரளாவில் சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டு இருக்கிறார். அவர் விரைவில் குணமடைந்து நடனம் ஆட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!