இனி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதியாக களமிறங்கும் பிக்பாஸ் நடிகர் – விலகும் அருண் பிரசாத்? காரணம் இதுவா?

0
இனி
இனி "பாரதி கண்ணம்மா" சீரியலில் பாரதியாக களமிறங்கும் பிக்பாஸ் நடிகர் - விலகும் அருண் பிரசாத்? காரணம் இதுவா?
இனி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதியாக களமிறங்கும் பிக்பாஸ் நடிகர் – விலகும் அருண் பிரசாத்? காரணம் இதுவா?

விஜய் டிவியில் டாப் சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத் சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும், அவருக்கு பதிலாக பிரபலமான சின்னத்திரை நடிகர் ஒருவர் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் பல சுவாரஸ்யமான கதை இருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ்வார்களா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய திருப்பம் ஒன்று வந்துள்ளது அதாவது இந்த கதையின் ஆணி வேரான வில்லி வெண்பாவிற்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதனால் ரசிகர்கள் என்ன நடக்கும் என எதிர்பார்த்து இருக்கின்றனர். மறுபக்கம் பாரதி மற்றும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்க்க அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

Exams Daily Mobile App Download

இது ஒரு புறம் இருக்க வழக்கமாக இந்த சீரியல் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த சீரியலில் TRP பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக கதாபாத்திரங்களின் மாற்றம் இருக்கிறது. முதலில் அகில் கதாபாத்திரத்தில் நடித்த அகிலன் சீரியலை விட்டு விலகினார். அடுத்ததாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி சீரியலை விட்டு விலகினார். அடுத்து முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகும் காவ்யா அறிவுமணி – முல்லையாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

அதுவும் சீரியல் TRP குறைய முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது கதாநாயகன் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத் சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அருணிற்கு பதிலாக சன் டிவி திருமதி செல்வம் சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் சஞ்சீவ் நடிக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றனர். அதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!