‘பிக் பாஸ்’ அபிநய்க்கு மனைவியுடன் விவாகரத்து? அவரே சொன்ன அப்டேட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
'பிக் பாஸ்' அபிநய்க்கு மனைவியுடன் விவாகரத்து? அவரே சொன்ன அப்டேட்! ரசிகர்கள் அதிர்ச்சி!
'பிக் பாஸ்' அபிநய்க்கு மனைவியுடன் விவாகரத்து? அவரே சொன்ன அப்டேட்! ரசிகர்கள் அதிர்ச்சி!
‘பிக் பாஸ்’ அபிநய்க்கு மனைவியுடன் விவாகரத்து? அவரே சொன்ன அப்டேட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியவர் அபிநய், அவர் நிகழ்ச்சியில் பாவ்னி உடன் நட்பாக இருந்ததால் பல சர்ச்சைகள் கிளம்பியது, அவர் மனைவி அவரை விவாகரத்து செய்துவிட்டார் என செய்திகள் பரவிய நிலையில் அதற்கு அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

பிக்பாஸ் அபிநய்:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அதில் 18 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு பல புது முகங்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர் தான் அபிநய். அபிநய் ஒரு திரை குடும்பத்தை சேர்ந்தவர்தான். திரை உலகின் வாரிசாக இருந்தாலும் அவருக்கு சொல்ல கூடிய அளவிற்கு ரசிகர்கள் இல்லை. இவர் முதன்முறையாக விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினியின் புதிய அவதாரம் – வைரலாகும் புகைப்படம்!

திருமணம் முடிந்து தனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது அவருடைய மனைவி மற்றும் குழந்தை பற்றி எவியில் சொல்லி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனியிடம் நட்பைத் தாண்டி பழகுகிறார் என்று பாவனி மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களும் பேசினார்கள். அதனால் பல சர்ச்சைகள் வந்தது. அதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சி தொடக்கம் முதல் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் மூன்றாவது வாரத்தில் இருவர் எலிமினேட் ஆவார்கள் என சொல்லப்பட்டது. அதல் ஷாரிக் உடன் இவரும் வெளியேறினார். இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் உங்களுக்கும் உங்க மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டதா என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு உருக்கமான பதில் அளித்து இருக்கிறார். அதில் நானும் என் மனைவியும் பிரியவில்லை. இப்படி சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

லக்ஷ்மியை மகளாக ஏற்றுக் கொண்ட பாரதி, சந்தோஷத்தில் கண்ணம்மா – சீரியலில் அடுத்த திருப்பம்!

மேலும் இப்படி தவறான வதந்திகளை கேட்டு நான் வருத்தமடைந்தேன். நானும் அபர்ணாவும் சந்தோசமான திருமண வாழ்க்கையில் இருக்கிறோம் என சொல்லி இருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அவரது மனைவி அபர்ணா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் அபிநய் பெயரை நீக்கியதால் தான் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சை கிளம்பியது. ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநய் மனைவி வந்தது காதலர் தின வாழ்த்து சொன்னதுமே அது பொய் தான் என ரசிகர்கள் உறுதிபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!