விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ப்ரோமோ சூட்டிங் – மிரட்டல் லுக்கில் ‘கமல்’!
விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் ப்ரோமோ சூட்டிங் எடுக்க நடிகர் கமல் சென்னை வந்துள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 5:
விஜய் டிவி “பிக் பாஸ்” மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. கடந்த சீசன்களுக்கு ரசிகர்கள் பெருகிய நிலையில் அதில் கலந்து கொண்டவர்கள் பெரிய திரையில் கொடிகட்டி பறக்க வாய்ப்பாக உள்ளது. அந்த வீட்டிற்குள் சென்று புகழ் பெற்றவர்கள் ஒரு புறம் இருக்க எதிர்மறையான கருத்துக்களை பெற்றவர்கள் மறுபுறம் உள்ளனர். மேலும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றே அவர்கள் புகழ் அடைந்தார்கள் என்றே சொல்லலாம்.
தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு 2950 குடும்ப அட்டைகள் – அமைச்சர் அதிரடி!
ஒவ்வொரு சீசனிலும் கமல் ஒரு கெட்டப்பில் வரும் நிலையில் இந்த சீசனில் கமல் எப்படி இருப்பார் என ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. கமல்ஹாசன் அரசியல் மற்றும் சினிமாவில் பிசியாக இருப்பதால் 4வது சீசனுடன் வர மாட்டார். அடுத்த சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் போன்ற வதந்திகள் பரவி வந்தது. அதற்கு அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு 5வது சீசன் புரமோ ஷூட்டிங்கில் கலந்து கொண்ட கமல்ஹாசனின் புகைப்படங்கள் கசிந்துள்ளன. கரு மஞ்சள் நிற கோட் அணிந்து சும்மா கெத்தா சிங்கம் போல நின்றபடி உலகநாயகன் போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன
TN Job “FB
Group” Join Now
கடந்த சீசனிலும் பிக் பாஸ் தகவல்கள் டிவியில் வருவதற்கு முன்பாகவே கசிந்தது. அதனால் இந்த சீசனில் அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ள பிக் பாஸ் குழுவினர் முயற்சி செய்தனர். ஆனால் அதையும் மீறி புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. பிக் பாஸ் ப்ரோமோவுக்காக சென்னைக்கு ஷூட்டிங் வந்த கமல்ஹாசன் அடுத்ததாக விக்ரம் படப்பிடிப்புக்காக காரைக்குடி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சீசனில் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும், யாரெல்லாம் போட்டியாளர்களாக உள்ளனர் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் எழுந்துள்ளது. மேலும் வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று கமல்ஹாசன் ஆடிப் பாடி வசனம் பேசி மக்களை கவரும் பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ புதிய லோகோவுடன் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.