‘வீடும் பெரிசு கலாட்டாவும் பெரிசு; எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ – கலாட்டாவான பிக் பாஸ் 5 ப்ரோமோ ரிலீஸ் !

0
'வீடும் பெரிசு கலாட்டாவும் பெரிசு; எதிர்பாராததை எதிர்பாருங்கள்' - கலாட்டாவான பிக் பாஸ் 5 ப்ரோமோ ரிலீஸ் !
'வீடும் பெரிசு கலாட்டாவும் பெரிசு; எதிர்பாராததை எதிர்பாருங்கள்' - கலாட்டாவான பிக் பாஸ் 5 ப்ரோமோ ரிலீஸ் !
‘வீடும் பெரிசு கலாட்டாவும் பெரிசு; எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ – கலாட்டாவான பிக் பாஸ் 5 ப்ரோமோ ரிலீஸ் !

பிக் பாஸ் 5 ன் டீசர் வெளியான பிறகு நிகழ்ச்சி பற்றிய அப்டேட்களுக்கு பயங்கர எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்று பிக் பாஸ் 5 ன் கலாட்டா நிறைந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 5:

ஹிந்தியில் பயங்கர பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் அதை பற்றிய எந்த வித விவரங்களும் இல்லாமல் மக்கள் பயங்கர எதிர்பார்ப்புடன் இருந்தனர். காரணம் உலக சினிமாவின் உச்ச கட்ட பிரபலம் உலக நாயகன் கமல் ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருந்தார். 100 நாட்கள் 17 பேர் ஒரு வீட்டினுள் வெளி உலக தொடர்பு இல்லாமல் எப்படி வாழ்கிறார்கள் என்பது தான் நிகழ்ச்சியின் கரு.

விஜய் டிவி ‘பிக்பாஸ் ஜோடிகள்’ அனிதா சம்பத் எடுத்த சூப்பர் முடிவு – ரசிகர்கள் பாராட்டு!

தற்போது வரை 4 சீசன்கள் வெற்றிகரமாக தமிழில் ஒளிபரப்பாகியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் ருசிகரமான சம்பவங்கள் மற்றும் தெரியவரும் பிரபலங்களின் உண்மை முகம் இதற்காக நிகழ்ச்சியின் ரசிகர்கள் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று காத்திருப்பார்கள். இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் 5 ன் டீசர் வெளியாகியது. இதனால் நிகழ்ச்சியின் ரசிகர்கள் மற்றும் மீம் கிரியேட்டர்கள் பலத்த குஷியில் உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

தற்போது இன்று மாலை பிக் பாஸ் 5 ன் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பிக் பாஸ் வீட்டில் ஆரம்பிப்பது போல் காலை 6 மணி என்ற பிக் பாஸ் குரலோடு கல்யாண வீடு காண்பிக்கப்படுகிறது. அதில், நம்ம உலக நாயகனின் கலக்கலான என்ட்ரி. தொடர்ந்து கலகலப்பாக செல்லும் கல்யாண வீட்டில் மகிழ்ச்சி அலைமோதுகிறது. பிக் பாஸ் வீட்டின் வழக்கம் போல் இரவு வருவதற்கு கல்யாண வீட்டில் ரகளையான சண்டையில் முடிகிறது அந்த காட்சிகள். அதற்கு, ‘கல்யாண வீட்டிலேயே இப்படின்னா, நம்ம வீட்ல… , இங்க வீடும் பெரிசு கலாட்டாவும் பெரிசு.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று கமலின் நக்கலுடன் ப்ரோமோ முடிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!