விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” இன்றைய ப்ரோமோ – கேள்விகள் நிறைய இருப்பதாக சொல்லும் கமல்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பிக்பாஸ் சீசன் 5" இன்றைய ப்ரோமோ - கேள்விகள் நிறைய இருப்பதாக சொல்லும் கமல்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” இன்றைய ப்ரோமோ – கேள்விகள் நிறைய இருப்பதாக சொல்லும் கமல்!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 20வது நாளான இன்று, நடிகர் கமல் போட்டியாளர்களுடன் பேச இருக்கிறார். இது குறித்த முத்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கப்பட்டு இன்று 20வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. முதலில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் நாமினேஷன் இல்லை. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் திருநங்கை நமீதா மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறினார். அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதால் வெளியேறினார் என விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து வெளியேறும் ரோஷினி? இன்று இறுதிக்கட்ட படப்பிடிப்பு!

அதை தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் வீட்டின் தலைவர் தாமரை மற்றும் பாவனி தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டனர். அதில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று நாதியா சங் வெளியேறினார். பின் மூன்றாவது வாரத்தில் 9 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் வீட்டின் பல விதிமுறைகள் போட்டியாளர்கள் சிலர் மீறினர். வழக்கமான சீசன்களில் இல்லாமல் போட்டியாளர்கள் தைரியமாக வீட்டின் விதிமுறைகளை மீறி உள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தான் – வாக்குகள் பட்டியல்!

அதனால் கமல் இன்றைய எபிசோடில் கேள்வி கேட்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. மாத்தி மாத்தி பேசி வீட்டில் உள்ளே இருப்பவர்களை ஏமாற்றலாம் ஆனால் வாத்தியை ஏமாற்ற முடியாது. கேட்க வேண்டிய கேள்வி நிறைய இருக்கிறது. ஒன்னு ஒன்னா கேட்கலாம் என கமல் கோபத்துடன் பேசி இருக்கிறார். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!