மீண்டும் கமலிடம் ‘குட்டு’ வாங்கிய ப்ரியங்கா – பிக்பாஸ் ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
மீண்டும் கமலிடம் 'குட்டு' வாங்கிய ப்ரியங்கா - பிக்பாஸ் ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
மீண்டும் கமலிடம் 'குட்டு' வாங்கிய ப்ரியங்கா - பிக்பாஸ் ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
மீண்டும் கமலிடம் ‘குட்டு’ வாங்கிய ப்ரியங்கா – பிக்பாஸ் ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

பிக்பாஸ் வார இறுதி நிகழ்ச்சி இந்த வாரம் கமல் சார் தொகுப்போடு வந்துள்ளதால் போட்டியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், கமல் இந்த வாரத்தில் நடந்த வாக்கு வாதம் குறித்து போட்டியாளர்களிடம் கேட்டு வருவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி வட இந்தியாவில் நல்ல பெரிய வெற்றி பெற்ற நிகழ்ச்சி ஆகும். ஆனால் தமிழக மக்களுக்கு இந்த நிகழ்ச்சி பிடிக்குமா அல்லது நிகழ்ச்சி தோல்வி அடையுமா என்று பல குழப்பங்களுக்கு இடையில் தான் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க உலக நாயகன் கமல் அவர்கள் தொகுத்து வழங்க இருப்பதால் நிகழ்ச்சி குறித்தான ஆர்வம் அதிகரித்து பார்க்கும் பார்வையாளர்கள் ஒரு பக்கம் உள்ளனர். பல விமர்சனங்களுக்கு நடுவில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி அடைந்து தற்போது 5 வது சீசனை அடைந்துள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் இணைந்தால் அதற்கு முக்கிய காரணம் மீனாதான்’ -டாப் சீரியல்களின் கமெண்ட்ஸ்!

இந்நிலையில், கமல் எதிர்பாராத விதமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் கடந்த வாரம் மட்டும் கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது இந்த வாரம் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் கமல் உடல் நலம் தேறி மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு வந்துள்ளார். இதனால் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை!

இந்நிலையில், இன்றைய எபிசோடில் கடந்த நாட்களில் நடந்து வந்த நிகழ்வுகளை பற்றி கமல் விசாரித்து வருகிறார். அதில், ப்ரியங்கா அண்ணாச்சியை பார்த்து நீங்கள் எந்த வேலையும் செய்யாமல் சும்மா ஓபி அடிக்கிறீங்க என்று குற்றம் சாட்டி இருந்தார். அது குறித்து கமல் தாமரையிடம் கேட்ட போது அண்ணாச்சி அனைத்து வேலைகளையும் செய்வதாக கூறினார். ராஜு இவுங்க ரெண்டு பெறும் சண்டை போட்டுக்குறாங்க சார் என்றும் கூறியுள்ளார். இதனால் கமல் இன்றைய எபிசோடில் கடந்த வாரம் நடந்த பல வாக்கு வாதங்களையும் பற்றி நிச்சயம் விசாரிப்பார் என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!