விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதம் – வெளியான அதிரடி ப்ரோமோ!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதம் - வெளியான அதிரடி ப்ரோமோ!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதம் - வெளியான அதிரடி ப்ரோமோ!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதம் – வெளியான அதிரடி ப்ரோமோ!

விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட டாஸ்க் ஒன்றில் இமான் அண்ணாச்சி மற்றும் அபிஷேக் உள்ளிட்ட சில போட்டியாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிறிய மோதல் போக்கு உருவானது போல இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ

எப்போது தான் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி சண்டை, போட்டியுடன் அனல் பறக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகியுள்ளது. அதாவது ‘என்ன ஃபீலிங்’ என்று பெயரிடப்பட்ட தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. ‘பிக்பாஸ்’ வீட்டில் இந்த வாரத்துக்கான தலைவர் பதவியில் ராஜு, சிபி, பாவனி, இசைவாணி என நால்வர் போட்டியிட்டுள்ளனர். இந்த டாக்ஸ் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதை மையமாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

அதில் போட்டியாளர்கள் நால்வரும் வெவ்வேறு கூண்டில் நிற்க, பிக்பாஸ் வீட்டின் மற்ற போட்டியாளர்கள் அவர்களிடம் இருந்து ஏதாவதொரு உணர்ச்சியை வெளிப்படுத்துமாறு செய்ய வேண்டும். இந்த டாஸ்கில் எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் இறுதி வரை நின்று ஜெயிப்பவர்கள் தான் இந்த வார தலைவராக தேர்தெடுக்கப்பட இருக்கின்றனர். இப்போது, இன்றைய நாளுக்கான 3வது ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

திருமணம் குறித்து மனம் திறந்த “பாக்கியலட்சுமி” இனியா – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

அதில் டாக்ஸ் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் போட்டியாளர் இசைவாணியை சிரிக்க வைக்க வைக்க மேற்கொள்ளும் முயற்சியில், இப்படி கஷ்டப்பட்டு டாஸ்கை ஜெயிக்கனுமா என அபிஷேக் கூற, தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசாதீங்க என இமான் அண்ணாச்சி கோரிக்கை வைக்கிறார். இந்த வார்த்தைகள் தடித்து ஒரு சண்டையாக மாறி இருக்கிறது. இமான் அண்ணாச்சியின் கருத்து அந்த டாஸ்கை குழைத்து விட்டதாக வருண், அபிஷேக் உட்பட மற்ற சில போட்டியாளர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாதம் பிக்பாஸ் வீட்டுக்குள் புதிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!