விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜுவிற்கு சர்பிரைஸ் கொடுத்த அம்மா – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி 'பிக்பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜுவிற்கு சர்பிரைஸ் கொடுத்த அம்மா - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி 'பிக்பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜுவிற்கு சர்பிரைஸ் கொடுத்த அம்மா - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜுவிற்கு சர்பிரைஸ் கொடுத்த அம்மா – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களை காண அவர்களது குடும்பத்தினர் வருகை தந்து கொண்டுள்ளனர். இப்போது ராஜுவின் அம்மா மற்றும் மனைவி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருப்பதை போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரீஸ் டாஸ்க் இந்த வார ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இடம்பிடித்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் 2 மாதங்கள் கடந்த பிற்பாடு, வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை காண அவர்களது குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருவார்கள். அந்த வகையில் பல நாட்கள் கழித்து குடும்பத்தினரை சந்திக்கும் போட்டியாளர்களின் நெகிழ்ச்சியான தருணங்கள் ரசிகர்களின் விருப்பமான எபிசோடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

அந்த வகையில் இந்த ‘பிக்பாஸ்’ சீசனிலும் தற்போது பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், நேற்று போட்டியாளர்கள் அக்ஷரா மற்றும் சிபியின் வீட்டில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து இன்றைய எபிசோடிலும் நிரூபின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்திருந்தார். இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான 2வது ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் ‘பிக்பாஸ்’ போட்டியாளர் ராஜுவின் அம்மா மற்றும் மனைவி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த யாஷிகா ஆனந்த் – போட்டியாளர்கள் உற்சாகம்!

முதலாவதாக, ராஜு தன்னுடைய காதல் மனைவியை சந்தித்ததும், கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்க, சற்றும் எதிர்பாராத வகையில் ராஜுவின் அம்மாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார். அம்மாவின் வருகையை எதிர்பாராத ராஜு சந்தோஷத்தில் திக்கு முக்காடுவது போல சில காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம் பிடித்திருந்தது. இப்போது ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் ராஜுவின் குடும்பத்தாரை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் இந்த ப்ரோமோவை கண்டு களித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here