விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் நிரூப்? இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறும் நிரூப்? இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறும் நிரூப்? இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் நிரூப்? இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில், 12வது வாரம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த வாரம் வெளியேற இருக்கும் போட்டியாளர்களுக்கான நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு, மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக 11 வாரங்களை முடித்து 12வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த வார தலைவர் போட்டி கொடுக்கப்பட்ட நிலையில் வழக்கம் போல பிரியங்கா சத்தம் ஓங்கி இருக்கிறது. இறுதி வாரத்திற்கு இன்னும் 3 அல்லது 4 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ நடிகர் அருணின் உற்சாக நடனத்துடன் களைகட்டிய கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

போட்டியில் வெற்றி பெற்று நாமினேஷனுக்கு வர கூடாது என போட்டியாளர்கள் பாசத்தை மறந்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வார நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கப்பட்டுள்ளது. அதில் அமீர் நிரூப்பை நாமினேட் செய்கிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் அடுத்தவர்களை புண்படுத்தும்படி இருப்பதாக சொல்லி இருக்கிறார். அடுத்து அக்ஷரா பிரியங்காவின் பெயரை சொல்கிறார். எல்லாரையும் ஏற்றி விடுவது போல இருப்பதாக சொல்கிறார்.

நடிகர் நகுலின் மனைவி திருநங்கையா? ரசிகரின் மோசமான விமர்சனம்! அவரே அளித்த பதிலடி!

அடுத்து வந்த நிரூப் பிரியங்காவை சொல்கிறார். அடுத்து சிபி பாவ்னியை நாமினேட் செய்கிறார். காரணமாக அபிநய் உடன் நடந்த விஷயங்களை சொல்லி இருக்கலாம் என சொல்கிறார். அடுத்து ராஜு பாவ்ணி பேரை சொல்கிறார். சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக்குவதாக அவர் சொல்கிறார். மேலும் அக்ஷரா பாவ்னியை நாமினேட் செய்யும் போது புதுசாக அமீர் அடிமை வந்திருக்கிறான் என கூறுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!