விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” 2வது ப்ரோமோ – அப்பா பற்றி பேசி அழுது புலம்பிய அபிஷேக் ராஜா!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பிக்பாஸ் சீசன் 5" 2வது ப்ரோமோ - அப்பா பற்றி பேசி அழுது புலம்பிய அபிஷேக் ராஜா!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” 2வது ப்ரோமோ – அப்பா பற்றி பேசி அழுது புலம்பிய அபிஷேக் ராஜா!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அபிஷேக் பேசுவது போல 2வது ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்டு தற்போது 2வது வாரத்தில் நடைபெற்று வருகிறது. முதல் வாரத்தில் 18 போட்டியாளர்களின் 9 போட்டியாளர்கள் லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் கலந்து கொண்டனர். தங்களது வாழ்க்கையில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் கதையாக சொல்லி வருகின்றனர். அவர்கள் கஷ்டங்களை கண்ணீருடன் சொல்ல, அதை பார்த்த மற்ற போட்டியாளர்களும் கண் கலங்கி வருகின்றனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்நிலையில் முதல் ப்ரோமோவில் நாட்டுப்புற கலைஞர் தாமரை தனது மகன் பற்றி கண்ணீருடன் சொல்கிறார். அடுத்தாக இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் அபிஷேக் ராஜா தனது கதையை சொல்ல, தொடங்கியதுமே கடவுள் மேலே வைக்கிற நம்பிக்கை இருக்கிறது என சொல்கிறார். பின் இந்த பில்டிங்கில் இருக்கும் ஒவ்வொரு செங்கல்லிலும் என் அப்பா ரத்தம் இருக்கிறது. அவர் யாரையும் ஏமாற்றாமல் செய்தார் என சொல்கிறார்.

கண்ணம்மாவிடம் ஹேமாவை தர மறுக்கும் பாரதி, DNA டெஸ்ட் எடுக்க வைப்பாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அதை ராஜு மற்றும் அண்ணாச்சி பின்னால் விமர்சனம் செய்கின்றனர். அதில் அவன் தொடக்கமே, எதுவும் வாங்க வராத நம்மளை வாங்க வைப்பார்கள் அல்லவா அது போல இருக்கிறது என சொல்கிறார். பின் அண்ணாச்சி அவன் சொன்ன கதையில் 2 வருடத்தில் அனைத்தையும் செய்தேன் என்று சொன்னான் அது தான் எனக்கு பிடிக்கவில்லை என சொல்ல, அடிக்க அடிக்க நான் மீண்டும் வருவேன் என அபிஷேக் சொல்லி முடிக்கிறார். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் என்னனென்ன சொல்றான் பாருங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here