பிரியங்காவுடன் சண்டையிடும் தாமரை, தலைவர் போட்டி எதிரொலி – “பிக்பாஸ்” ப்ரோமோ ரிலீஸ்!

0
பிரியங்காவுடன் சண்டையிடும் தாமரை, தலைவர் போட்டி எதிரொலி -
பிரியங்காவுடன் சண்டையிடும் தாமரை, தலைவர் போட்டி எதிரொலி - "பிக்பாஸ்" ப்ரோமோ ரிலீஸ்!
பிரியங்காவுடன் சண்டையிடும் தாமரை, தலைவர் போட்டி எதிரொலி – “பிக்பாஸ்” ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில், எட்டாவது வாரமான இன்று பிரியங்கா மற்றும் தாமரை இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. இது குறித்த 2வது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 50 நாட்களை நெருங்குகிறது. போட்டியாளர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றனர். கடந்த சீசன் போல இல்லாமல் நட்பு புகை அனைத்தையும் மறந்து விளையாடுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில் எட்டாவது வாரத்திற்கான தலைவர் போட்டி நடைபெறுகிறது. அப்போது தாமரை தலைவராக கூடாது என பிரியங்கா சொல்கிறார்.

நடிகை சமந்தவுடனான விவாகரத்துக்கு பிறகு காதலில் விழுந்த நாகசைதன்யா? சர்ச்சையை கிளப்பிய இன்ஸ்டா பதிவு!

அதை கேட்டதும் தாமரை கோபப்படுகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில், தாமரை தலைவராக எனக்கு தகுதி இல்லை என சொல்ல என்ன காரணம் என கேட்கிறார். வாய்ப்பு வந்தால் மட்டும் தான் சில கசப்புகளை தீர்க்க வேண்டும் என்று இல்லை என பிரியங்கா சொல்ல, கசப்பு என்று எதை சொல்றீங்க என தாமரை கேட்கிறார். இந்த வீட்டில் இருக்கும் சில கசப்புகள் தான் என பிரியங்கா சொல்ல, அதனால் என்ன அதனால் நான் வேலை செய்யாமல் இருக்கின்றேனே என தாமரை கேட்கிறார்.

திருமணத்திற்கு பிறகு ‘ராஜா ராணி’ சித்து, ஷ்ரேயா ஜோடி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

அப்படி எல்லாம் இல்லை என பிரியங்கா சொல்ல, அப்பறம் என்ன மனதில் பட்டத்தை நேரடியாக சொல்லுங்க என தாமரை சொல்கிறார். சம்மந்தம் இல்லாமல் பேசுறீங்க பிரியங்கா என தாமரை சொல்ல, இந்த வாரம் தலைவராக உனக்கு மெண்டல் ஸ்டேட் பத்தாது என பிரியங்கா சொல்கிறார். அதை சொல்ல உங்களுக்கு முதலில் தகுதி இல்லை என தாமரை பிரியங்காவை சொல்ல, சீ சீ என இருவரும் பேசிக் கொள்கின்றனர். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்களுக்கு கமல் தாமரை பற்றி சொன்னது உண்மை தானோ என்ற சந்தேகம் வந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!