Vijay TV Bigg Boss Promo – பாவனியை காதலிப்பதாக சொன்னது யுக்தி என கூறும் அமீர்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் டிக்கெட் டூ ஃபினாலே போட்டியில் பாவனியை காதலிப்பதாக கூறியது வெறும் யுக்தி தான் என அமீர் கூறுவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
பிக்பாஸ் ப்ரோமோ
தற்போது விறுவிறுப்பும், ஸ்வாரசியமுமாக நகர்ந்து வரும் ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கான டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இதில் சில போட்டிகள் கடுமையானதாக இருந்தாலும் சிலவை மைண்ட் சம்பந்தப்பட்ட விளையாட்டாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வார துவக்கத்தில் இருந்து நடைபெற்று வரும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் இருந்து ஐந்து பேர் வெளியேற்றப்பட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
விஜய் டிவி ‘சம்சாரம் அது மின்சாரம்’ நிகழ்ச்சியில் களமிறங்கிய வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!
குறிப்பாக நேற்று நடைபெற்ற டாஸ்கில் போட்டியாளர்கள் ராஜு மற்றும் பிரியங்கா இருவரும் வெளியேற்றப்பட்டனர். இவர்களை தொடர்ந்து அமீர், சிபி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் இன்றைய நாளுக்கான போட்டிகளில் களம் கண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சிக்கான 2வது ப்ரோமோவில் போட்டியாளர்கள் ஒரு கட்டத்திற்குள் நிற்க, மற்ற போட்டியாளர்கள் அவர்கள் மூவரிடமும் சில கேள்விகள் கேட்க வேண்டும்.
இந்த கேள்விக்கான பதிலை அவர்கள் கொடுக்கும் போது அது மற்ற அனைத்து போட்டியாளர்களின் கருத்துக்களோடு ஒத்துப் போனால் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறலாம். அந்த வகையில் பாவனி போட்டியாளர் அமீருக்கு முன்னால் ஒரு கேள்வியை வைக்கிறார். அதாவது, அபிநய் விஷயத்தில் அமீர், பாவனியை இன்ப்ளுயன்ஸ் செய்தாரா என்று பாவனி கேட்க, அதை பற்றி பேச வேண்டாம் என்று சொன்னதாக ராஜு சொல்கிறார். அப்போது, அது என்னுடைய இஷ்டம் என்று பதில் கூறுகிறார் பாவனி.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகள் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!
தொடர்ந்து அமீர் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்து, பாவனியுடன் நெருக்கமாகி அவரை உபயோகப்படுத்தியதாக பிரியங்கா கூற அதற்கு ஆம் என்று பதில் சொல்லும் விதமாக அமீர் பச்சை நிற விளக்கை உயர்த்தி காட்டுகிறார். இப்போது அமீரின் இந்த பதிலால் ஆச்சரியப்படும் பாவனி திகைத்து நிற்பதை போல ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சிக்கான 2வது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.