இமான் அண்ணாச்சி போல மாறி கலாய்த்த பிரியங்கா – பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ ரிலீஸ்!

0
இமான் அண்ணாச்சி போல மாறி கலாய்த்த பிரியங்கா - பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ ரிலீஸ்!
இமான் அண்ணாச்சி போல மாறி கலாய்த்த பிரியங்கா - பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ ரிலீஸ்!
இமான் அண்ணாச்சி போல மாறி கலாய்த்த பிரியங்கா – பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் ஐந்தாவது நாளான இன்றைய எபிசோட் குறித்த மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி 4 நாட்கள் முடிவடைந்து ஐந்தாவது நாளில் அடியெடுத்து வைக்கிறது. மேலும் கடந்த சீசன் போல இல்லாமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நட்புடன் இருந்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் இமான் அண்ணாச்சி மற்றும் பிரியங்காவின் காமெடிக்கு அளவே இல்லாமல் இருக்கிறது. போட்டியாளர்களை நெட்டிசன்கள் கலாய்க்க பிக்பாஸை பிரியங்கா கலாய்த்து தள்ளுகிறார்.

நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை நிராகரித்தது ஏன்?

இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழ் கிடைத்துள்ளது. ஆனால் அவர் வீட்டில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஐந்தாவது நாளான இன்றைய எபிசோட் குறித்த மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இமான் அண்ணாச்சி மற்ற போட்டியாளர்கள் போல நடித்து காட்டுகிறார். முதலில் நமீதா மாரிமுத்து போல நடித்து காட்டுகிறார்.

தனத்தின் அம்மாவுடன் ஜோடி சேர்ந்த கஸ்தூரி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ரீல்ஸ் வீடியோ!

அதை பார்த்து அவரே விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். அதன்பின் பாடகி இசைவாணி போல நடித்து காட்டுகிறார். அதை பார்த்தும் மற்ற போட்டியாளர்கள் சிரிக்க, அங்கே வந்த பிரியங்கா, அண்ணாச்சி போல நடிக்க தலைகாணியை வைத்துக் கொண்டு நீ அண்ணாச்சியா நான் அண்ணாச்சியா என கேட்கிறார். அதை பார்த்ததும் இமான் அண்ணாச்சிக்கே சிரிப்பு தாங்க முடியவில்லை. மேலும் பிரியங்காவின் நகைச்சுவை குணத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here