கொலை செய்யப்பட்ட விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அமீரின் அம்மா இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!

0
கொலை செய்யப்பட்ட விஜய் டிவி 'பிக் பாஸ்' அமீரின் அம்மா இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!
கொலை செய்யப்பட்ட விஜய் டிவி 'பிக் பாஸ்' அமீரின் அம்மா இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!
கொலை செய்யப்பட்ட விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அமீரின் அம்மா இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக வந்து தனது வாழ்க்கை கதையால் பல இதயங்களை உருக செய்த மாஸ்டர் அமீர் அவர்களின் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் அமீர்:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களில் பலர் அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களை கதையாக சொல்லி இருக்கின்றனர். ஆனால் இந்த சீசனில் நடன இயக்குனர் அமீர் அவர்களின் வாழ்க்கை கதை அனைவரின் மனதையும் உருக செய்தது. விவரம் தெரியாத வயதில் அப்பாவை இழந்து, பின் பல கஷ்டங்களுடன் அம்மா தான் தன்னுடைய வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்து வந்திருக்கிறார். அதன் பின் அவரது அம்மா கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார்.

TRP ரேட்டிங்கில் மீண்டும் முதலிடம் பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

அவரது அம்மா இறப்பின் போது தனியாக சிறு பையனாக இருந்த அவர் பல கஷ்டங்களை தாண்டி அம்மாவிற்காக நடனம் கற்றுக் கொண்டு தற்போது அனைவரும் பேசும் அளவிற்கு வந்திருக்கிறார். மேலும் தனக்கு ஆதரவு கொடுத்த குடும்பத்தை பற்றியும் அவர் பேசி இருக்கிறார். இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்கில் அவரது குடும்பத்தை பார்க்க ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் தன்னுடைய அம்மா ரொம்ப கண்டிப்பாக தன்னை வளர்த்ததாக கூறினார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படம்!

அவர் அம்மா மிகவும் அழகாக இருப்பார் எனவும், அம்மா நான் சிறிய லோக்கல் சேனலில் ஆடியதை பார்த்து ஊர் முழுவதும் பெருமையாக சொன்னார். நான் இப்போது இவ்வளவு பெரிய சேனல் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியில் நிற்கிறேன் அதை பார்க்க அம்மா இல்லை என வருத்தப்பட்டு பேசி இருந்தார். அவருடைய பேச்சு பலருக்கு வருத்தமாக இருந்தாலும், அவர் பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக மாறி இருக்கிறார். இந்நிலையில் அவர் அம்மா உடன் இருப்பது போல ஓவியம் ஒன்றை அமீர் ரசிகர்கள் வரைந்து வெளியிட்டு இருக்கின்றனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!