BHEL நிறுவனத்தில் 75 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனம் ஆனது சமீபத்தில் Welders பணிக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மேற்கண்ட பணிக்கு என்று 75 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் வயது வரம்பு போன்ற அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Bharat Heavy Electricals Limited (BHEL) |
பணியின் பெயர் | Welders |
பணியிடங்கள் | 75 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BHEL காலிப்பணியிடங்கள்:
சமீபத்தில் வெளியாகிய அறிவிப்பில், Welders பணிக்கு என்று மொத்தமாக 75 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
BHEL கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BHEL வயது வரம்பு:
22.01.2022 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயதானது 35 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.
BHEL ஊதிய தொகை:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.37,500/- மாத ஊதிய தொகையாக வழங்கப்படும்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
BHEL தேர்வு முறை:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BHEL விண்ணப்ப கட்டணம்:
Gen / OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.200/- வசூலிக்கப்படும்.
SC / ST / PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது.
BHEL விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 28.02.2022 ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.