ஜானகி அம்மாவிற்கு பாரதி & கண்ணம்மா செய்த கொடுத்த சத்தியம் – இன்றைய எபிசோட்!

1
ஜானகி அம்மாவிற்கு பாரதி & கண்ணம்மா செய்த கொடுத்த சத்தியம் - இன்றைய எபிசோட்!
ஜானகி அம்மாவிற்கு பாரதி & கண்ணம்மா செய்த கொடுத்த சத்தியம் - இன்றைய எபிசோட்!
ஜானகி அம்மாவிற்கு பாரதி & கண்ணம்மா செய்த கொடுத்த சத்தியம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஜானகி அம்மாவிற்கு ஆப்ரேசன் செய்ய வேண்டும் என அவருடைய பசங்க ஆசைப்பட்டு பாரதியிடம் சொல்கின்றனர். பின் பாரதி மற்றும் கண்ணம்மாவிடம் ஜானகி அம்மா சத்தியம் ஒன்றை வாங்கி கொள்கிறார்,

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஜானகி அம்மா குடும்பத்துடன் கண்ணம்மாவும் கோவிலுக்கு செல்கின்றார். அப்போது தட்டில் தாலி வைத்து கொடுக்க ஐயர் என்ன இதெல்லாம் என கேட்கிறார். அப்போது அம்மாவிற்கு 60வது கல்யாணம் செய்ய வேண்டும் என சொல்ல, இவர்களை பார்த்தால் வயது அதிகமாக இருப்பது போல இருக்கிறதே என கேட்கிறார். அப்போது அம்மா அப்பா 60வது கல்யாணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார்கள். ஆனால் நாங்க வெளிநாட்டில் இருந்ததால் செய்ய முடியவில்லை . இப்போது எல்லாரும் இருக்கோம் அதனால் செய்து கொள்ளலாம் என நினைத்தோம் என சொல்கின்றனர்.

Exams Daily Mobile App Download

பின் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பின் கண்ணம்மா கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட ஹேமா கண்ணம்மாவை ஊட்டிவிட சொல்கிறார். அப்போது லட்சுமி எனக்கும் ஊட்டிவிடு என சொல்ல, லட்சுமி ஹேமாவிடம் என் அம்மாவை ஏன் இப்படி பார்க்கிறாய் என கேட்க ஹேமா அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார். கண்ணம்மா நீ பார்க்கும் பார்வைக்கு எனக்கு அர்த்தம் தெரியும் ஆனால் என்ன செய்வது என கண்ணம்மா நினைக்கிறார்.

ஆனால் ஹேமாவிற்கு பாரதி சமையல் அம்மா உன் அம்மா ஆக முடியாது என சொன்னது நியாபகத்திற்கு வருகிறது. ஆனால் ஹேமா தனக்கு பிடித்த கண்ணம்மாவே தன்னுடைய அம்மாவா வர வேண்டும் என நினைக்கிறாள். மறுபக்கம் ஜானகி அம்மாவின் பசங்க பாரதியை பார்த்து அம்மாவிற்கு ஆப்ரேசன் செய்யலாம் என சொல்கின்றனர். ஆனால் பாரதி அவர் வேண்டாம் என சொன்னதாக சொல்கிறார். அவங்க எதாவது சொல்லி இருப்பார் ஆனால் அம்மாவிற்கு தெரியாமல் ஆப்ரேசன் செய்ய வேண்டும் என சொல்கிறார்கள்.

பாரதி உங்க அப்பா ஏற்றுக் கொள்ள மாட்டார் என சொல்ல அப்பாவிடம் பேசிட்டோம் அப்பா தான் உங்களிடம் பேச சொன்னதாக சொல்கிறார். அப்போது ஜானகி அம்மாவின் பசங்க ஜானகி அம்மாவிடம் சிறிய ஆப்ரேசன் என சொல்லிவிட்டு ஆப்ரேசன் செய்யலாம் என சொல்ல பாரதி நான் பேசி பார்க்கிறேன் என சொல்கிறார். பின் பாரதி ஜானகி அம்மாவிடம் வந்து நாளைக்கு உங்களுக்கு சிறிய ஆப்ரேசன் இருப்பதாக சொல்ல அதெல்லாம் வேண்டாம் என ஜானகி அம்மா சொல்கிறார். ஆனால் பாரதி இது சாதாரண ஆப்ரேசன் தான் என சொல்ல என் உடம்பு தாங்காது என ஜானகி அம்மா சொல்கிறார்.

இது நீங்க உங்க பசங்களுடன் சொந்த ஊரில் இருக்க வேண்டும் என சொன்னீர்கள் அதற்கான சிறிய ஆப்ரேசன் தான் என சொல்ல ஜானகி அம்மா சரி என சொல்கிறார். எப்போது ஆப்ரேசன் என கேட்க நாளை காலை 4 மணிக்கு என பாரதி சொல்கிறார். அதன் பின் ஜானகி அம்மா பசங்க எல்லாருக்கும் புது துணி வாங்கி கொடுக்கிறார். பின் பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்ந்து ட்ரெஸ் வாங்கி கொள்ள சொல்ல ஆனால் கண்ணம்மா சேர்ந்து வேண்டாம் என சொல்கிறார். நான் தெரியாமல் சொல்லிவிட்டதாக ஜானகி அம்மா சொல்கிறார்.

புது வேலைக்காக பணம் கேட்கும் கண்ணன், கதிர் ஹோட்டலிற்கு வந்த ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் தனியாக ட்ரெஸ் கொடுத்து ஆசிர்வாதம் செய்கிறார். பின் ஜானகி அம்மா கண்ணம்மா பாரதியை தனியாக அழைத்து பேசுகிறார். அவர்களிடம் நீங்க உங்க மனைவி, கணவருடன் ஒரே ஒரு நாள் சேர்ந்து வெளியே செல்ல வேண்டும். இருவரும் மன கசப்புகளை மறந்து ஒன்றாக இருக்க வேண்டும் என சொல்கிறார். வாழ்க்கையின் தத்துவம் ஒற்றுமையாக குழந்தைகளுடன் கணவன் மனைவி வாழ்வது தான். நீங்க குழந்தையுடன் தனியாக இருப்பதாக சொன்னதை என்னால் தாங்க முடியவில்லை என சொல்கிறார்.

உன் அம்மா போல நினைத்து நான் சொல்வதை கேட்க வேண்டும் பாரதி என சொல்ல, ஒரு நாள் உங்களுக்கு பிடித்த சாப்பாட்டு எல்லாம் அனுபவித்து சாப்பிட்டு பழைய வாழ்க்கையை வாழ வேண்டும் என சொல்ல ஒரு அம்மாவா நான் கேட்கிறேன் ஒரு நாள் நீ பழைய வாழ்க்கை வாழ வேண்டும் என சத்தியம் செய்து கொடு என பாரதி மற்றும் கண்ணம்மாவிடம் சத்தியம் வாங்க இருவரும் சத்தியம் செய்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. இன்னுமா இத ஓட்டுறான்
    பென்னட் பிரவீண்….
    கருமம்….. கருமம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here