தீவிரவாதிகளை வீழ்த்த திட்டமிட்ட பாரதி, உண்மையை தெரிந்து ஏற்பட்ட ஆபத்து – “பாரதி கண்ணம்மா” அப்டேட்!

0
தீவிரவாதிகளை வீழ்த்த திட்டமிட்ட பாரதி, உண்மையை தெரிந்து ஏற்பட்ட ஆபத்து -
தீவிரவாதிகளை வீழ்த்த திட்டமிட்ட பாரதி, உண்மையை தெரிந்து ஏற்பட்ட ஆபத்து - "பாரதி கண்ணம்மா" அப்டேட்!
தீவிரவாதிகளை வீழ்த்த திட்டமிட்ட பாரதி, உண்மையை தெரிந்து ஏற்பட்ட ஆபத்து – “பாரதி கண்ணம்மா” அப்டேட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் செல்வம் விடுதலை செய்யப்பட்டு மருத்துவமனைக்கு வந்து பாரதி, கண்ணம்மாவை பார்த்து நக்கலாக பேசுகிறார். பின் பாரதி தன்னுடைய திட்டங்களை செயல்படுத்த அப்போது தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்கிறார். அதன் பின் கண்ணம்மாவை தீவிரவாதிகள் மிரட்டுகின்றனர்.

பாரதி கண்ணம்மா:

“பாரதி கண்ணம்மா” சீரியலில், செல்வம் விடுதலை செய்யப்பட்டு மருத்துவமனையில் அவனுடைய கூட்டத்திற்குள் வருகிறார். அப்போது பாரதி கண்ணம்மா குழந்தைகள் இருப்பதை பார்த்து செல்வம் நக்கலாக பேசுகிறார். கண்ணம்மா ரொம்ப பேசாதே கண்டிப்பாக நீ மாட்டிக் கொள்வாய் என சொல்கிறார். பின் பாரதி தண்ணீரில் மயக்க மருந்து கலந்து இருப்பதை அஞ்சலியிடம் சொல்லி அகிலிடம் சொல்ல சொல்கிறார். அந்த நேரம் பார்த்து ஒரு தீவிரவாதி மயக்கம் போட்டு விழ அனைவரும் பதட்டம் அடைகின்றனர். பின் பாரதி நான் சென்று நிலைமையை பார்த்துவிட்டு வருகிறேன் என சொல்லி கிளம்புகிறார்.

மற்ற தீவிரவாதிகளும் தண்ணீரை குடித்துவிட்டு மயக்கம் போட்டு விழ அகில் பாரதி ஒரு தீவிரவாதியை அடித்துவிட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகின்றார். வரும் வழியில் இருக்கும் தீவிரவாதிகளை அவர் அடிக்க அதை மற்றொரு தீவிரவாதி பார்த்துவிடுகிறார். அவர் பாரதியை தேடி செல்ல, பின் பக்கமாக வந்து பாரதி அவரை அடித்துவிடுகிறார். பின் தீவிரவாதிகளின் தலைவன் வந்து இருவரையும் அடித்து விடுகிறார். பாரதியின் திட்டம் எல்லாம் தெரிந்துவிட, செல்வம் பாரதியிடம் டாக்டர் என்பதால் உன்னை சும்மா விட்டால் உனக்கு திமிரு அதிகமாகி விட்டதாக சொல்லி துப்பாக்கியால் சுடுகிறார்.

Exams Daily Mobile App Download

அது பற்றி செய்தியில் சொல்ல, சௌந்தர்யா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். சௌந்தர்யா எனக்கு பயமாக இருப்பதாக சொல்ல, வேணு எதுவும் நடந்திருக்காது என தைரியம் சொல்கிறார். சௌந்தர்யா இல்லை என் மனசிற்கு எதோ தவறாக இருப்பதாக சொல்ல, போலீசார் தீவிரவாதியை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். ஏன் துப்பாக்கி சத்தம் கேட்டது என போலீசார் கேட்க தீவிரவாதி பாரதி செய்ததை பற்றி சொல்கிறார். பின் போலீஸ் உள்ளே இருப்பவர்களுக்கு எதாவது ஆனது என்றால் நாங்க நீ சொல்வதை செய்யமாட்டோம் என சொல்கிறார். டாக்டர் பாரதியை கொல்லமாட்டோம் என தீவிரவாதி சொல்ல, பாரதி எப்படி இருக்கிறார் என உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம் என சொல்லி புகைப்படம் ஒன்றை அனுப்பி வைக்கிறார்கள்.

மணப்பெண்ணிற்கு அழகாக மேக்கப் போட்ட ஐஸ்வர்யா,மூர்த்திக்கு வரும் புது பிரச்சனை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!

பின் கண்ணம்மாவிடம் ஹேமா, டாடிக்கு என்ன ஆச்சு என கேட்க, தீவிரவாதிகள் லக்ஷ்மியை கூட்டிக் கொண்டு செல்கிறார்கள். கண்ணம்மாவிடம் எவ்வளவு திமிரு இருந்தால் தண்ணீரில் மயக்க மருந்து கலந்து திட்டம் போடுவீங்க லக்ஷ்மியை சுட்டுவிடவா என கேட்டு மிரட்டுகின்றனர். செல்வம் இவளை சுட்டுவிடு என சொல்ல, எங்களை மிரட்டுவது இருக்கட்டும் டாக்டரை என்ன செய்தீர்கள், என கண்ணம்மா கேட்கிறார். அஞ்சலியும் அவர்களுக்கு என்ன ஆச்சு என கேட்க, எங்களை மயக்கம் போட வைத்து மடக்கி பிடிக்கலாம் என நினைத்தீர்களா அவ்வளவு தைரியமா என கேட்க, இனிமேல் இப்படி செய்தால் எல்லாரையும் சுட்டுவிடுவேன் என தீவிரவாதி மிரட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிய, அகில் பாரதியின் நிலைமை என்ன ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here