விரைவில் முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல்? ரசிகர்கள் ஷாக்!

0
விரைவில் முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல்? ரசிகர்கள் ஷாக்!
விரைவில் முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல்? ரசிகர்கள் ஷாக்!
விரைவில் முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல்? ரசிகர்கள் ஷாக்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மா தொடர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள், விதவிதமான சீரியல்கள் என விஜய் தொலைக்காட்சி எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி ட்ரெண்டிங்கை கிரியேட் செய்யும். இதனாலே விஜய் டிவி என்றென்றைக்கும் ரசிகர்கள் மனதில் நச்சென இடம் பிடித்த ஒன்றாக உருமாறியுள்ளது. இதில் பிக்பாஸ், சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி என நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் பின்னி பெடலெடுத்தாலும் மற்றொரு பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 என பல சீரியல்கள் இல்லத்தரசிகளை மட்டுமல்லாது ஆண்களையும் அதிகளவு கவர்ந்துள்ளது.

திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – நாளை (ஆக.08) பவித்ரோற்சவம் தொடக்கம்!

இப்படி இருக்கையில் பாரதி கண்ணம்மா தொடரானது தொடங்கிய நாள் முதல் இந்நாள் வரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. ” பாரதிக்கு கண்ணம்மா ,நீ எனக்கு உயிரம்மா ” என்று சீரியலின் ஆரம்ப கால கட்டத்தில் ஒரே காதல் மழையை பொழிந்து சீரியலுக்கு ரசிகர் பட்டாளம் குவிந்தது. காதல் மழையில் திடீர் இடி விழுந்தது போல் நெகட்டிவ் ரோல் நம்ம வெண்பா பாரதிக்கும் ,கண்ணம்மாவுக்கும் இடையே பல ரூபத்தில் பிரச்சனைகளை உருவாக்கினார். பிரச்சனைகளில் ஒன்று தான் பாரதி கண்ணம்மாவின் பிரிவுக்கு காரணமாக அமைந்தது.

Exams Daily Mobile App Download

கதையின் படி, கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி 8 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இயக்குனரும் புது புது முகங்களை கொண்டு ட்விஸ்ட் கொடுத்தும், மகள்களை வைத்து ஆர்வத்தை தூண்டியதுமான பல காட்சிகளை வைத்து எபிசோடுகளை நகர்த்தினாரே தவிர பாரதியும், கண்ணம்மாவும் இன்று வரை சேர்ந்தபாடில்லை. ஆனாலும் இந்த சீரியலுக்கென தனி பார்வையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில் இந்த சீரியல் முடிவு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒரு பக்க ரசிகர்கள் சோகத்திலும், மறு பக்கம் பாரதியும், கண்ணம்மாவும் சேராமலே முடிய போகுதா? என்று பல வகையில் ஆதங்கத்தையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!