“பாரதி கண்ணம்மா” சீரியல் கிளைமாக்ஸ் இது தானா? வெளியான தகவல்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல ட்விஸ்ட்களுக்கு பின் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செய்கிறார். அதில் ஹேமா, லட்சுமி தன்னுடைய குழந்தை என்ற உண்மை பாரதிக்கு தெரிய வர கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார். கண்ணம்மா பாரதியை மன்னிப்பாரா என்பதே கதையின் கிளைமாக்ஸ் காட்சியாக இருக்க போகிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் பல எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழகமே பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாரா என்ற கேள்வியை முன் வைத்த நிலையில், அதற்கெல்லாம் தற்போது விடை கிடைத்துள்ளது. மருத்துவமனையில் கண்ணம்மா சொன்னதை கேட்டு பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போகிறார். மருத்துவரிடம் எனக்கும் லட்சுமி மற்றும் ஹேமாவிற்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என பாரதி சொல்கிறார்.
அதில் என்ன முடிவு வரும் என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். மறுபக்கம் வெண்பா ரோஹித் கெட்டவன் என்பதை நிரூபித்துவிட்டதால், இனி எப்படியாவது பாரதியை திருமணம் செய்யலாம் என சந்தோஷத்தில் இருக்கிறார். பாரதியும் டிஎன்ஏ முடிவில் நான் அப்பா இல்லை என வந்தால் வெண்பாவை திருமணம் செய்து கொள்வோம் என முடிவெடுக்கிறார். ஆனால் டிஎன்ஏ டெஸ்ட் முடிவில் பாரதியின் மகள் தான் ஹேமா, லட்சுமி என்ற உண்மை தெரிய வருகிறது.
முதல் நாளே கண்டிஷன் போடும் ராதிகா குடும்பம், சிக்கலில் கோபி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
Exams Daily Mobile App Download
அதனால் மனம் வருத்தப்பட்ட பாரதி இத்தனை நாள் கண்ணம்மாவை ஒதுக்கி வைத்ததை நினைத்து வருத்தப்பட்டு அழுகிறார். உடனே அவர் கண்ணம்மாவை சந்தித்து மன்னிப்பு கேட்கிறார். ஆனால் கண்ணம்மா பாரதியை மன்னிப்பதாக இல்லை. அதை சாதகமாக பயன்படுத்தி வெண்பா பாரதியை திருமணம் செய்ய நினைக்க, ஆனால் குழந்தைகளுக்காக கண்ணம்மா பாரதியை மன்னித்து ஏற்றுக் கொள்ள இருக்கிறார். இது தான் பாரதி கண்ணம்மாவின் கிளைமாக்ஸ் காட்சியாக இருக்க போகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்