‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவின் புதிய தோற்றம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

0
'பாரதி கண்ணம்மா' வில்லி பரினாவின் புதிய தோற்றம் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
'பாரதி கண்ணம்மா' வில்லி பரினாவின் புதிய தோற்றம் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவின் புதிய தோற்றம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவாக மிரட்டி வரும் பிரபல நடிகை பரினா, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமான உடையணிந்த ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட, அது வைரலாகி வருகிறது.

நடிகை பரினா

பொதுவாக ஒரு சீரியல் அல்லது சினிமா என்று எடுத்துக்கொள்ளும் போது அதில், கதாநாயகன், கதாநாயகி எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு நெகட்டிவ் கதாப்பாத்திரங்களும் முக்கியம் தான். ஆனால், ஒரு பாசிட்டிவ் ஆன கதாப்பாத்திரங்களை நாம் திரையில் பார்க்கும் போது எப்படி ஏற்றுக்கொள்கிறோமோ, அதே அளவுக்கு நெகடிவ் ஆன கதாபாத்திரங்களை வெறுப்பது, விமர்சிப்பது எல்லாம் சகஜமாக இருந்து வருகிறது. இப்படி பலரது ஏச்சுகளையும், பேச்சுக்களையும் வாங்கிக் கொண்டு ஒரு சிறந்த சீரியல் வில்லியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பரினா.

TN Job “FB  Group” Join Now

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா’ என்ற சீரியலில் வெண்பாவாக நடித்து வில்லத்தனங்களுக்கு பெயர் போனவர் நடிகை பரினா. ஒரு வில்லி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போலவும், இப்படி எல்லாம் இருப்பார்களா என்றும் கலவையான விமர்சனங்களை பெற்று மக்களை என்டர்டைன் செய்து வரும் நடிகை பரினாவுக்கு வேறு ஒரு முகம் உண்டு. அதாவது, நடிகை பரினா சீரியலில் எந்த அளவுக்கு வில்லத்தனம் செய்து வருகிறாரோ, நிஜ வாழ்க்கையில் அதற்கு நேர்மாறானவர்.

தொடர்ந்து பின்னிடைவை சந்தித்து கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா – டாப் ரேஞ்சில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்!

எப்போதும் கலகலப்பாகவும், ஆக்டிவாகவும் காணப்படும் நடிகை பரினா சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருப்பது வழக்கம். அந்த வகையில், இன்ஸ்டா பக்கத்தில் தனது பெயரில் கணக்கு வைத்திருக்கும் பரினா அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவிட்டு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறார். அதன்படி, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நடிகை பரினா இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பாரம்பரியமான உடையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!