பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பாரதி – இவருக்கு பதில் இனி இவர் தான்!

0
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பாரதி - இவருக்கு பதில் இனி இவர் தான்!
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பாரதி - இவருக்கு பதில் இனி இவர் தான்!
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பாரதி – இவருக்கு பதில் இனி இவர் தான்!

பாரதியும் கண்ணம்மாவும் சேருவார்களா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருண் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. கண்ணம்மாவை அனைவருமே வெறுத்து ஒதுக்கிய காலகட்டத்தில் பாரதி தான் கண்ணம்மாவை விரும்பி திருமணம் செய்துகொண்டார். ஆனால், பாரதிக்கு நாளடைவில் சந்தேகம் என்கிற ஒரு நோய் வந்து தொற்றி கொண்டதால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கண்ணம்மாவை விட்டு பிரிந்து இருக்கிறார்.

Exams Daily Mobile App DownloadV

ஒரு வேளை உண்மையாகவே கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லையோ என பாரதி நினைக்கும் போதெல்லாம் வெண்பா பாரதியின் மனதை மாற்றி கண்ணம்மாவை வெறுக்க வைக்கிறார். எப்படியாவது பாரதியின் மனதை மாற்றி பாரதியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வெண்பா பிளான் போட்டு கொண்டிருக்கிறார். தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். என்ன தான் கண்ணம்மாவை விட்டு பாரதி விலக நினைத்தாலும் விதி அவர்களை சேர்த்து வைக்கவே நினைக்கிறது.

விஜயின் ‘வேட்டைக்காரன்’ பட வில்லன் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி! திரையுலகினர் இரங்கல்!

ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ள விஷயம் வெண்பாவிற்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. இப்படி, பாரதி கண்ணம்மா தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருண் சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாரதி கதாபாத்திரத்தில் திருமதி செல்வம் சீரியலின் மூலமாக பிரபலமான சஞ்சீவ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அருண் சீரியலில் இருந்து விலகியுள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!