வெண்பாவை திருமணம் செய்ய மறுத்து விடும் பாரதி, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – அடுத்த வாரம் முக்கிய திருப்பம்!’

0

வெண்பாவை திருமணம் செய்ய மறுத்து விடும் பாரதி, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – அடுத்த வாரம் முக்கிய திருப்பம்!’

பாரதி கண்ணம்மா தொடரில் அடுத்தடுத்து பல முக்கிய திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், அடுத்த வாரம் நடக்க இருக்கும் சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இவை அனைத்தையும் ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா தொடரில் இத்தனை வருடங்களாக பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு இடையில் இருக்கும் தனிப்பட்ட பிரச்னைகளை வைத்து மட்டுமே கதை கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகு இவர்களின் குழந்தைகளான ஹேமா மற்றும் லக்ஷ்மி இருவரும் இவர்களை ஒன்று சேர்க்க செய்து வந்த அட்டகாசங்கள் காட்டப்பட்டது. இதனால் ரசிகர்களுக்கு கதை ஒரே பாதையில் பயணிப்பதாக எண்ணம் வர ஆரம்பித்து விட்டது. இதன் விளைவாக சீரியலின் டிஆர்பி பின்னடைவை சந்தித்தது.

தமிழகத்தில் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் – பொதுமக்கள் கவனத்திற்கு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

இதனால் தற்போது கதை வேறு பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. பாரதி விக்ரம் ஆரம்பித்த மருத்துவமனையில் தலைமை இருதய மருத்துவராக சேர்ந்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத விதமாக அதே மருத்துவமனையில் கண்ணம்மாவும் பணிக்கு சேர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் இவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை தவிர்த்து விட்டு, மக்களுக்கு உதவி புரியும் பல செயல்களை செய்து வருகின்றனர். உடல் தானத்தை பற்றிய காட்சிகள் சென்ற வாரம் வந்தது. வரும் வாரத்தில் உடல் தானம் பெற்ற குழந்தையின் பெற்றோர் நன்றி கூறுவது போலவும் காட்சிகள் வர உள்ளது.

அது தவிர வெண்பாவின் அம்மா திருமணத்திற்கு பலத்த ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வருகிறார். இதனால் வரும் மாப்பிளை அனைவரிடமும் வெண்பா ஏதாவது தில்லு முள்ளு செய்து ஓட விடுகிறார். அதன்பிறகு பாரதியிடம் வந்து இத்தனை வருடங்கள் உனக்காக தான் நான் காத்திருந்தேன். நீயும், நானும் திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார் என்று கூறுகிறார். ஆனால் பாரதி அப்படி ஒரு எண்ணம் எனக்கு கிடையாது என்று கூறி விடுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் வரும் வாரத்தில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!