வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பா அடுத்து பாரதியை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று தீவிரமாக திட்டமிட்டு வருகிறார். இந்த திட்டத்தை நிறைவேற்றி பாரதியை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இதையடுத்து கண்ணம்மா என்ன முடிவு எடுப்பார்? என எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர்.

அடுத்த ட்விஸ்ட்:

விஜய் டிவிவில் வெவ்வேறு கதைக்களத்துடன் பல்வேறு சீரியல்கள் உள்ளன. அந்த வகையில் சின்னத்திரையில் உள்ள அனைத்து சீரியல்களுக்கு போட்டியாக உள்ள சீரியல் தான் பாரதி கண்ணம்மா சீரியல் ஆகும். இந்த சீரியலில் பாரதியாக அருண் மற்றும் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்பிரியன் நடித்து வந்தார். பின்பு ரோஷினிக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்ததால், புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து முக்கிய ரோலில் பாரீனா நடித்து வருகிறார். பாரதியும் கண்ணம்மாவும் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்திருப்பதற்கு வெண்பாவாக நடிக்கும் ஃபரீனாவே காரணம். இப்போதும் அவர்களை சேர விடாமல் தொல்லைகளைக் கொடுத்து வருகிறார். இந்த சீரியலில் வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா என்ற பெயரில் ரேகா என்ட்ரி கொடுத்துள்ளார்.

அரங்கேறும் வேலன், வள்ளியின் திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!

அவர் வெண்பாவிடம் நான் சொல்லும் பையனை திருமணம் செய்து கொள் என அழுத்தமாக சொல்லிவிடுகிறார். இதனால் மொத்த கோபத்தையும் பாரதி மீது காட்டுகிறார் வெண்பா. வெண்பா, பாரதியிடம் போய் பேசுகிறார். அப்போது பாரதி வெண்பாவிடம், இதுக்கு முன்னாடி உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி ஏமாத்தி இருக்கேனா? என பாரதி கேட்க, நான் உன்னை காதலிக்குறது இந்த ஊருக்கு தெரியும். உன்னோட ஆபிஸ், உன் வீட்ல இருக்குறவங்கன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனாலும் உனக்கு தெரியாதா? அன்னைக்கு தாலி கட்டுற வரைக்கும் போய் நின்னாலும், நீ திரும்ப தாலி கட்டுவன்னு தான் நான் காத்திட்டு இருக்கேன் என சொல்கிறார்.

கோபியை வீட்டை விட்டு துரத்திவிட்ட குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இதை கேட்டு கோபப்படும் பாரதி, மொத நீ உன்னோட மன பிரமைல இருந்து வெளியே வா என சொல்ல, உனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம் நான் வேணும். உனக்காக தான் நான் இத்தனை வருஷமா காத்திட்டு இருக்கேன் என சொல்ல, மொத என்னால தான் உன் வாழ்க்கை போய்ச்சுன்னு சொல்றதை நிப்பாட்டு. பாரதி பேசியதால் கடுப்பான வெண்பா, எனக்கு கிடைக்காதது யாருக்குமே கிடைக்க கூடாது என மனதுக்குள் நினைத்து கொள்கிறாள். உனக்கும் எனக்கும் என்ன இருக்கு என்பதை நீயே உன் அம்மாவிடம் போய் சொல்லு என கூறுகிறார். ஆனால் தற்போது பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் ஆகி, மணக்கோலத்தில் உள்ளது மாதிரியான ப்ரோமோ வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதன் பிறகு இந்த சீரியலில் பயங்கரமான ட்விஸ்ட் உள்ளதை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here