திடீரென திருமணம் செய்து கொண்ட “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகர் – வைரல் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

0
திடீரென திருமணம் செய்து கொண்ட
திடீரென திருமணம் செய்து கொண்ட "பாரதி கண்ணம்மா" சீரியல் நடிகர் - வைரல் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
திடீரென திருமணம் செய்து கொண்ட “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகர் – வைரல் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா”வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவருக்கு நேற்று திருமணம் முடிந்துள்ளது. திடீரென அவருக்கு திருமணம் முடிந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

நடிகர் திருமணம்:

தமிழ் சின்னத்திரையில் காலை முதல் மாலை வரை ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் விஜய் டிவி ப்ரைம் டைம் சீரியல்களை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த வகையில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் பல திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா ஜோடிக்கு அடுத்தபடியாக ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் ஜோடியாக அஞ்சலி அகில் கதாபாத்திரங்கள் இருக்கிறது. முதலில் அஞ்சலி அகில் கதாபாத்திரத்தில் நடிகர் அகிலன் மற்றும் கண்மணி நடித்து வந்தனர். அதன் பின் அகில் கதாபாத்திரத்தில் நடித்தவர் விலகி, அவருக்கு பதிலாக சுகேஷ் என்பவர் நடிக்க தொடங்கினார். அவரும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

கதிரை வம்பிழுக்கும் எதிர் டீம் போட்டியாளர், புது வீடு பற்றி பேசும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் நடிகர் சுகேஷ் நேற்று திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருடைய திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் அவருடைய திருமணத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த புதுமண தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கமெண்ட்களாக பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!