விஜய் டிவியில் ‘பாரதிதாசன் காலனி’ புதிய மெகா தொடர் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவியில் 'பாரதிதாசன் காலனி' புதிய மெகா தொடர் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் 'பாரதிதாசன் காலனி' புதிய மெகா தொடர் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் ‘பாரதிதாசன் காலனி’ புதிய மெகா தொடர் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்துமே ரசிகர்களின் விருப்ப பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் மேலும் ஒரு புதிய சீரியல் அந்த வரிசையில் இணைய இருக்கிறது. இதற்கான ப்ரோமோவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

புதிய சீரியல்:

மக்களின் அன்றாட பொழுது போக்கில் முக்கிய இடம் வகிப்பது சீரியல்கள் தான். அனைத்து முன்னனி தொலைக்காட்சி சேனல்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் அவற்றில் அனைத்துமே மக்களின் ஆதரவை பெறுவது இல்லை. பாதி சேனல்கள் மாற்று மொழி சீரியல்களை தான் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்புகிறார்கள். மக்களின் மனம் கவர்ந்த ஒரு சில சீரியல்கள் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இவை மட்டுமே டிஆர்பி ரேட்டிங் பட்டியலில் இடம் பிடிக்கின்றது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பிரேக் எடுத்துள்ள தனம் சுஜிதா – வைரல் வீடியோ!

அந்த வகையில் சீரியல் உலகின் சமீப காலத்து முடி சூடா மன்னனாக இருக்கும் விஜய் டிவியின் சீரியல்கள் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் உள்ள கதை அம்சத்துடன் வருகிறது. சின்னத்திரையில் சீரியல்கள் முன்னர் மாலை நேரங்களில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது காலை முதல் இரவு வரை தொடர்ந்து சீரியல்களை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் கூட தற்போது சீரியல்களை நோக்கி படை எடுக்க தொடங்கியுள்ளனர்.

Exams Daily Mobile App Download

தற்போது விஜய் டிவியின் ஹிட் லிஸ்டில் மேலும் ஒரு சீரியல் சேர உள்ளது. பாரதிதாசன் காலனி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியலில் சின்னத்திரையின் பல பிரபலங்கள் ஒன்று சேர இருக்கின்றனர். பல வகையான மனிதர்களுடன் வர உள்ள கதையாக இருப்பதால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது உறுதியாகிறது. அதில் வழக்கம் போல் ஒரு காதல் ஜோடியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பாவும் இருக்கிறார்கள். இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் புதிய சீரியல் குறித்து உற்சாகத்தில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here