பாரதிதாசனின் புகழ் பெற்ற நூல்கள்

0

பாரதிதாசனின் புகழ் பெற்ற நூல்கள்

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 – ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

பாரதிதாசன் படைப்புகள் பல அவர் வாழ்ந்தபொழுதும் அவரின் மறைவிற்குப் பின்னரும் நூல்வடிவம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்:

பாரதிதாசன் புகழ் பெற்ற நூல்கள்:

வ.எண்நூலின் பெயர் ஆண்டுநூலின் வகைகுறிப்பு
1அகத்தியன்விட்ட புதுக்கரடி1948காவியம்பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
2சத்திமுத்தப்புலவர்1950நாடகம்
3இன்பக்கடல்1950நாடகம்
4அமிழ்து எது?1951கவிதைபாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
5அமைதி1946நாடகம்
6அழகின் சிரிப்பு1944கவிதை
7இசையமுது (முதலாம் தொகுதி)1942இசைப்பாடல்
8இசையமுது (இரண்டாம் தொகுதி)1952இசைப்பாடல்
9இந்தி எதிர்ப்புப் பாடல்கள்1948இசைப்பாடல்
10இரணியன் அல்லது இணையற்ற வீரன்1939நாடகம்1934 – செப்டம்பர் 5ஆம் நாள் பெரியார் தலைமையில் அரங்கேற்றப்பட்டது.
11இருண்டவீடு1944காவியம்
12இலக்கியக் கோலங்கள்1994குறிப்புகள்ச. சு. இளங்கோ பதிப்பு
13இளைஞர் இலக்கியம்1958கவிதை
14உலகம் உன் உயிர்1994கவிதைவெவ்வேறு இதழ்களில் எழுதிய தலையங்கக் கவிதைகள். ச. சு. இளங்கோ பதிப்பு
15உலகுக்கோர் ஐந்தொழுக்கம்1994கட்டுரைகள்ச.சு.இளங்கோ பதிப்பு. தலையங்கக் கட்டுரைகள்
16எதிர்பாராத முத்தம்1938கவிதை
17எது இசை?1945சொற்பொழிவுபாரதிதாசனும் பிறரும் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு
18ஏழைகள் சிரிக்கிறார்கள்1980சிறுகதைகள்ச. சு. இளங்கோ பதிப்பு.
19ஏற்றப் பாட்டு1949இசைப்பாடல்பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
20ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது1978இசைப்பாடல்த.கோவேந்தன் பதிப்பு
21கடற்மேற் குமிழிகள்1948காவியம்பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
22கண்ணகி புரட்சிக் காப்பியம்1962காவியம்
23கதர் இராட்டினப்பாட்டு,1930இசைப்பாடல்
24கவிஞர் பேசுகிறார்1947சொற்பொழிவுஅன்பு ஆறுமுகம் என்பவரால் தொகுக்கப்பட்டது
25கழைக்கூத்தியின் காதல்1951நாடகம்
26கற்கண்டு1945நாடகம்பாரதிதாசன் நாடகங்கள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது
27காதலா? கடமையா?1948காவியம்
28காதல் நினைவுகள்1944கவிதை
29காதல் பாடல்கள்1977கவிதைத.கோவேந்தன் பதிப்பு
30குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி1942காவியம்
31குடும்ப விளக்கு - 2ஆம் பகுதி: விருந்தோம்பல்1944காவியம்
32குடும்ப விளக்கு - 3ஆம் பகுதி: திருமணம்1948காவியம்
33குடும்ப விளக்கு - 4ஆம் பகுதி: மக்கட்பேறு1950காவியம்
34குடும்ப விளக்கு - 5ஆம் பகுதி: முதியோர் காதல்1950காவியம்ஐந்துபகுதிகளும் இணைந்த பதிப்பு பின்னாளில் வந்தது.
35குமரகுருபரர்1992நாடகம்1944ஆம் ஆண்டில் இந்நாடகம் 1992ஆம் ஆண்டில் தமிழ்நாடனால் பதிப்பிக்கப்பட்டது
36குயில் பாடல்கள்1977கவிதைத.கோவேந்தன் பதிப்பு
37குறிஞ்சித்திட்டு1959காவியம்
38கேட்டலும் கிளத்தலும்1981கேள்வி-பதில்ச. சு. இளங்கோ பதிப்பு
39கோயில் இருகோணங்கள்1980நாடகம்ச. சு. இளங்கோ பதிப்பு
40சஞ்சீவி பர்வதத்தின் சாரல்1930காவியம்பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
41சிரிக்கும் சிந்தனைகள்1981துணுக்குகள்ச. சு. இளங்கோ பதிப்பு
42சிறுவர் சிறுமியர் தேசியகீதம்1930கவிதை
43சுயமரியாதைச் சுடர்1931பாட்டுகிண்டற்காரன் என்னும் புனைப்பெயரில் எழுதிய 10 பாடல்களைக் கொண்டது. குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படையல்
44செளமியன்1947நாடகம்
45சேரதாண்டவம்1949நாடகம்
46தமிழச்சியின் கத்தி1949காவியம்
47தமிழியக்கம்1945கவிதைஒரே இரவில் எழுதியது
48தமிழுக்கு அமிழ்தென்று பேர்1978கவிதைத.கோவேந்தன் பதிப்பு
49தலைமலை கண்ட தேவர்1978நாடகம்ச. சு. இளங்கோ பதிப்பு
50தாயின் மேல் ஆணை1958கவிதை
51தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு1930பாட்டுபாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
52திராவிடர் திருப்பாடல்1948கவிதைபாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
53திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்1949கவிதைபாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
54தேனருவி1956இசைப்பாடல்1978ஆம் ஆண்டில் சென்னை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட த. கோவேந்தன் பதிப்பில் புதிய பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
55தொண்டர் வழிநடைப் பாட்டு1930பாட்டு
56நல்லதீர்ப்பு1944நாடகம்
57நாள் மலர்கள்1978கவிதைத.கோவேந்தன் பதிப்பு
58படித்த பெண்கள்1948நாடகம்
59பன்மணித்திரள்1964கவிதை
60பாட்டுக்கு இலக்கணம்1980இலக்கணம்ச. சு. இளங்கோ பதிப்பு
61பாண்டியன் பரிசு1943காவியம்
62பாரதிதாசன் ஆத்திசூடி1948கவிதை
63பாரதிதாசன் கதைகள்1955சிறுகதைசிவப்பிரகாசம் பதிப்பு. புதுவை முரசு இதழில் வெளிவந்த 14 படைப்புகளின் தொகுப்பு
64பாரதிதாசனின் கடிதங்கள்2008கடிதங்கள்ச.சு.இளங்கோ பதிப்பு
65பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி)1938கவிதை
66பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)1949கவிதைஇ.பதிப்பு 1952
67பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி)1955கவிதை
68பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி)1977கவிதை
69பாரதிதாசன் நாடகங்கள்1959கவிதை
70பாரதிதாசனின் புதிய நாடகங்கள்1994நாடகங்கள்ச.சு.இளங்கோ பதிப்பு
71பாரதிதாசனின் புதினங்கள்1992புதினம்ச.சு.இளங்கோ பதிப்பு
72பாரதிதாசன் பேசுகிறார்1981சொற்பொழிவுச.சு.இளங்கோ பதிப்பு.
73பாரதிதாசன் திருக்குறள் உரை1992உரைச.சு.இளங்கோ பதிப்பு
74பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்2012திரைக்கதைச.சு.இளங்கோ பதிப்பு. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்கள் பற்றிய ஆய்வும் பதிப்பும்
75பிசிராந்தையார்1967நாடகம்1970ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
76புகழ்மலர்கள்1978கவிதைத.கோவேந்தன் பதிப்பு
77புரட்சிக் கவி1937கவிதைபாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
78பொங்கல் வாழ்த்துக் குவியல்1954கவிதை
79மணிமேகலை வெண்பா1962கவிதை
80மயிலம் சுப்பிரமணியர் துதியமுது1926இசைப் பாடல்
81மயிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம்1925கவிதை
82மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு1920இசைப்பாடல்
83மானுடம் போற்று1984கட்டுரைகள்ச.சு.இளங்கோ பதிப்பு
84முல்லைக்காடு1948கவிதை
85வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?1980இலக்கணம்ச.சு.இளங்கோ பதிப்பு
86வேங்கையே எழுக1978கவிதைத.கோவேந்தன் பதிப்பு

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!