பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஐ.ஏ.எஸ். தேர்விற்கு மாதம் ரூ.3,000/-  உதவித்தொகையுடன் பயிற்சி!!

1
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஐ.ஏ.எஸ். தேர்விற்கு மாதம் ரூ.3,000/-  உதவித்தொகையுடன் பயிற்சி!!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஐ.ஏ.எஸ். தேர்விற்கு மாதம் ரூ.3,000/-  உதவித்தொகையுடன் பயிற்சி!!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ..எஸ். தேர்விற்கு மாதம் ரூ.3,000/-  உதவித்தொகையுடன் பயிற்சி!!

பாரதியார் பல்கலைக்கழகத்தின் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணியியல் பயிற்சி மையம் 27. 06.2021 ம் தேதி யு.பி.எஸ்.சி யால் நடத்தப்படவுள்ள ஐ.ஏ.எஸ் தேர்விற்காக முழு நேர பயிற்சி அளிக்க உள்ளது.  இந்த பயிற்சியானது 15.02.2021 முதல் தொடங்க உள்ளது.  இதற்காக வெளிமாவட்ட மாணவர்களுக்கு மாதம் 3,000 ருபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

விடுதி மாணவர்களின் எண்ணிக்கை:

பாரதியார் பல்கலைக்கழகம்  சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் 60 வெளிமாவட்ட மாணவ, மாணவியர் கலந்துகொள்ளலாம்.

விடுதியில் சேருவதற்கான கல்வித்தகுதி:

பல்கலைக்கழகத்தின் விடுதியில் சேர்ந்து பயிற்சி எடுக்க நினைக்கும் மாணவர்கள் 30.01.2021 அன்று நுழைவுத்தேர்வு நடைபெறும். அதில் கலந்து கொண்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வு யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு அடிப்படையில் நடைபெறும்.

மாணவர் உதவித்தொகை:

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து பயில விரும்பும் வெளி மாவட்ட மாணவ, மாணவியருக்கு விடுதியில் தங்கும் இடம், நூலக வசதி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும் உணவுப்படியாக மாதம் ரூ.3,000 வழங்கப்படும்.

நுழைவு தேர்விற்கான விண்ணப்பக்கட்டணம்:

யு.பி.எஸ்.சி  தேர்விற்கு பயிற்சி பெற விடுதியில் சேரும் நுழைவு தேர்விற்கான  விண்ணப்ப கட்டணம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

மாணவர் தேர்வு செய்யும் முறை:

30.01.2021 அன்று பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நுழைவு தேர்வு நடைபெறும்.

நுழைவு தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை:

நுழைவு தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள் பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள ( http://www.b-u.ac.in ) விண்ணப்பத்தை  தரவிறக்கம் செய்து அதை முழுமையாக பூர்த்தி செய்து, நுழைவுசீட்டு, கல்விச்சான்று, சாதிச்சான்று மற்றும் ரூ.5 அஞ்சல் முதிர்க்கரை ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதிய அலுவலக கவர்  ஒன்றை இணைத்து 05.01.2021 ம் தேதிக்குள் கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.

ஒருங்கிணைப்பாளர்/ பயிற்சி இயக்குனர் அண்ணா நூற்றாண்டு நினைவு குடிமைப்பணியியல் பயிற்சி மையம்,
நாச்சி முத்து அரங்கம்,
பாரதியார் பல்கலைக்கழகம்,
கோவை- 46.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!