லட்சுமியின் அப்பா யார் என்ற உண்மையை சொன்ன பாரதி, கலங்கிய கண்ணம்மா – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

0
லட்சுமியின் அப்பா யார் என்ற உண்மையை சொன்ன பாரதி, கலங்கிய கண்ணம்மா - ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
லட்சுமியின் அப்பா யார் என்ற உண்மையை சொன்ன பாரதி, கலங்கிய கண்ணம்மா - ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
லட்சுமியின் அப்பா யார் என்ற உண்மையை சொன்ன பாரதி, கலங்கிய கண்ணம்மா – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வரும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று வெளியான ப்ரோமோ பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி சீரியல்கள் என்றாலே தனி வரவேற்பு உள்ள நிலையில் TRPயில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் சீரியல் தான் “பாரதி கண்ணம்மா” இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்வார்களா, லட்சுமி ஹேமாவிற்கு உண்மை தெரிய வருமா என ஆவலுடன் ரசிகர்கள் இருக்கின்றனர். சென்ற வாரம் முழுவதும் கண்ணம்மா பிறந்தநாளில் லக்ஷ்மியின் அப்பாவை பற்றி சொல்ல போவதாக சொல்ல, அதை நினைத்து லட்சுமி பல கனவுகளுடன் இருக்கிறார். ஆனால் பாரதி கண்ணம்மாவின் பிறந்தநாளுக்கு வர கூடாது என நினைக்கிறார்.

தமிழகம் முழுவதும் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

அதனால் பாரதியை நேரில் பார்க்க சென்ற கண்ணம்மா உங்களிடம் முக்கியமான ரகசியம் ஒன்றை சொல்ல இருப்பதாக சொல்கிறார். அது என்ன என சௌந்தர்யா குழப்பத்தில் இருக்க கண்ணம்மா ஹேமா பற்றி சொல்ல போவதாக சொல்கிறார். அதை கேட்டு பாரதி என்ன செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இப்படி பரபரப்பாக கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று வெளியான ப்ரோமோ பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர்.

இன்று முதல் பிப்.25 வரை மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!

அதில் கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவிற்கு வந்த பாரதி அப்பாவை நினைத்து லட்சுமி எவ்வளவு கனவுடன் ஏற்பாடுகளை செய்திருக்கிறாள் என பார்த்து வருத்தப்படுகிறார். பின் உனக்கு அம்மா அப்பா இரண்டுமே உன் அம்மா தான் அவர் உனக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார் என சொல்ல, பாரதி சொன்னதை கேட்டு கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். லட்சுமி அம்மாவை கஷ்டப்படுத்தியதை நினைத்து வருத்தத்துடன் கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்துகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!