
பாரதி, சௌந்தர்யா & வேணுவின் குழந்தையே கிடையாது – பரபரப்பான திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்!
பாரதி கண்ணம்மா சீரியலில் அதிரடியாக பல கதாபாத்திரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கதையில் பல திருப்பங்கள் எதிர்பாராத விதமாக நடக்க உள்ளது. அதன்படி, பாரதி சௌந்தர்யாவின் குழந்தையே கிடையாது என்று கூறப்படுகிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் தொடங்கப்பட்ட ஆரம்பத்தில் இருந்து எப்போதும் ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வந்த தொடர் ஆகும். ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக ஒரே கதையை திரும்ப திரும்ப சொல்லி கதையை நகர்த்தாமல் இருக்கிறார் இயக்குனர். இந்த அதிருப்தி சமீப காலமாகவே மேலோங்கி இருந்து வந்தது. அதன்விளைவாக சில வாரங்களாக ரேட்டிங்கில் பின்னடைவை பாரதி கண்ணம்மா சந்தித்து வருகிறது. இதனால் கதையில் புதிய திருப்பங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
இதனால் பாரதி கண்ணம்மா சீரியலில் புதிதாக பல கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் சமீபத்தில் இணைந்த வடிவு கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல், வேணு மற்றும் சௌந்தர்யா உடன் படித்த கல்லூரி நண்பர் விக்ரம் புதிதாக கதையில் வந்துள்ளார். இவரை பற்றிய ஏதோ ஒரு விஷயத்தை சௌந்தர்யா மறப்பது போல் காட்சிகள் உள்ளது. வேணு இவர்களின் கல்லூரி கதைகளை சொல்லி வருகிறார்.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 09) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இதேபோல் பாரதியின் மருத்துவமனைக்கு ஒரு பெண்மணி புதிதாக வருகிறார். அவர் யார் எதற்காக வந்துள்ளார் என்பது போன்ற எந்த விவரமும் சொல்ல வில்லை. இந்நிலையில், விக்ரம் மற்றும் சௌந்தர்யா இடையில் உள்ள ரகசியம் பாரதியை பற்றியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பாரதி வேணு மற்றும் சௌந்தர்யாவின் குழந்தையாக இல்லாமல் இருக்கலாம் என்பது போன்ற மாற்றங்கள் வர உள்ளது.