திருடனால் கத்திக்குத்து படும் கண்ணம்மா, காப்பாற்றி சிகிச்சை அளிக்கும் பாரதி – ப்ரோமோ ரிலீஸ்!

0
திருடனால் கத்திக்குத்து படும் கண்ணம்மா, காப்பாற்றி சிகிச்சை அளிக்கும் பாரதி - ப்ரோமோ ரிலீஸ்!
திருடனால் கத்திக்குத்து படும் கண்ணம்மா, காப்பாற்றி சிகிச்சை அளிக்கும் பாரதி - ப்ரோமோ ரிலீஸ்!
திருடனால் கத்திக்குத்து படும் கண்ணம்மா, காப்பாற்றி சிகிச்சை அளிக்கும் பாரதி – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதிக்கு உதவி செய்யப்போய் திருடனால் கத்திக்குத்து படும் கண்ணம்மாவை காப்பாற்றுவதற்காக, பாரதி அவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்வது போல வெளியாகி இருக்கும் ப்ரோமோ ஒன்று ரசிகர்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

சமீப காலமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையே மீண்டுமாக சிறிய சிறிய பிரச்சனைகள் எழ ஆரம்பித்திருக்கிறது. அதாவது, லட்சமியின் அப்பா பாரதி எனும் உண்மையை கண்ணம்மா சொல்லப்போவதாக கூறி இருக்க மீண்டும் பாரதி, கண்ணம்மா இருவரும் எலியும் பூனையுமாக முட்டி மோதிக்கொள்கின்றனர். இப்படி இருக்க பாரதிக்கு எப்போது தான் கண்ணம்மா மேல் உள்ள சந்தேகம் தீரும், இவர்கள் இருவரும் எப்போது தான் ஒன்று சேருவார்கள் என்ற தருணத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – 31% அகவிலைப்படி உயர்வு!

இந்த நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக இந்த சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில், பாரதியின் கார் திடீரென ரிப்பேர் ஆக அதனை வழியில் நிறுத்தி சரி செய்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியாக வரும் ஒரு திருடன், பாரதிக்கு தெரியாமல் திறந்திருக்கும் காரில் இருந்து அவரது பர்ஸை எடுத்துக்கொண்டு ஓடுகிறான். இதனை பின்னால் இருந்து பார்த்து விடும் கண்ணம்மா அந்த திருடனை விரட்டிக்கொண்டு ஓடுகிறார். அப்போது, காய்கறி வாங்கிக் கொண்டு வந்த கூடையில் இருக்கும் தேங்காயை வைத்து கண்ணம்மா திருடனை அடித்துவிட்டு பர்ஸை எடுக்க முயல்கிறார்.

NEET தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி உத்தரவு!

அப்போது அடிபட்ட திருடன் கண்ணம்மாவை தாக்க வர பாரதி ஓடி வந்து திருடனை அடித்து விட்டு கண்ணம்மாவை காப்பாற்றுகிறார். இந்த கலவரத்தில் திருடன் கத்தி எடுத்து பாரதியை குத்த வர, கண்ணம்மா குறுக்கே வந்து கையில் குத்து வாங்குகிறார். இப்போது அடிபட்ட கண்ணம்மா அங்கேயே மயங்கி விழ, அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடும் பாரதி பதட்டத்துடன் சிகிச்சை அளிக்கிறார். மறுபக்கத்தில் இந்த காட்சியை பார்க்கும் வெண்பா சற்று கடுப்பாகிறவாறு வெளியான ப்ரோமோ ஒன்று ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!