கண்ணம்மாவை புகழ்ந்து தள்ளிய பாரதி – கடுப்பான வெண்பா! சீரியலில் புதிய திருப்பம்!
கண்ணம்மா தான் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றினார். இதனால் கண்ணம்மாவை பாரதி புகழ்ந்து பேசுகிறார். இதனை கேட்ட வெண்பா பொறுத்துக்கொள்ள முடியாமல் கடுப்பாகும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. எப்போதும் கண்ணம்மாவை வெறுத்து ஒதுக்கி கொண்டிருக்கும் பாரதி தற்போது கண்ணம்மாவை புகழ்ந்து பாராட்டியுள்ளார். கண்ணம்மாவை பாரதி பாராட்டுவதை பார்த்து குடும்பத்தினர்கள் மிகவும் சந்தோசப்படுகிறார்கள். கண்ணம்மாவை பாரதி பாராட்டுவதை பார்த்ததும் பலரும் கண்ணம்மாவை பாரதி ஏற்றுக்கொள்ள போகிறார் என மனக்கோட்டை கட்டிவிட்டனர். ஆனால், தற்போதைக்கு அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
Exams Daily Mobile App Download
வெண்பா இருக்கும் வரைக்கும் பாரதி, கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்திருந்தால் கண்ணம்மா மீது சந்தேகம் வந்த போதே DNA டெஸ்ட் எடுத்து அனைத்து உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு மேலாகியும் DNA டெஸ்ட் எடுக்காமல் சீரியலை ஓட்டி கொண்டிருக்கின்றனர். DNA டெஸ்ட் எடுத்து விட்டால் சீரியலே முடிந்துவிடும். ஆனால், அதை மட்டும் செய்யாமல் சீரியலை வேறு பக்கம் கொண்டு சென்றதால் ரசிகர்கள் கடுப்பாகினர்.
தற்போது மீண்டும் சீரியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மருத்துவர்களால் கூட முடியாத காரியத்தை கண்ணம்மா யோசித்து செய்திருக்கிறார். கண்ணம்மா மீது தற்போது பாரதிக்கு நல்ல எண்ணம் வந்திருக்கலாம். ஆனால், ஒரு முறை வெண்பாவை பாரதி பார்த்து விட்டால் அதுவும் காணாமல் போய்விடும். கண்ணம்மாவை பாரதி பாராட்டியதை பார்த்து வெண்பா என்ன செய்ய காத்திருக்கிறாரோ என்பது தெரியவில்லை. இதற்கு பிறகு கண்ணம்மா மீது வெறுப்பை ஏற்படுத்த வெண்பா என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.