மறுபடியும் வெண்பாவை திருமணம் செய்ய திட்டம் போடும் பாரதி – பாரதி கண்ணம்மா தொடரில் புதிய திருப்பம்!

0
மறுபடியும் வெண்பாவை திருமணம் செய்ய திட்டம் போடும் பாரதி - பாரதி கண்ணம்மா தொடரில் புதிய திருப்பம்!
மறுபடியும் வெண்பாவை திருமணம் செய்ய திட்டம் போடும் பாரதி - பாரதி கண்ணம்மா தொடரில் புதிய திருப்பம்!
மறுபடியும் வெண்பாவை திருமணம் செய்ய திட்டம் போடும் பாரதி – பாரதி கண்ணம்மா தொடரில் புதிய திருப்பம்!

பாரதி எப்போது தான் DNA டெஸ்ட் எடுத்து கண்ணம்மா பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ள போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த சமயத்தில் மறுபடியும் வெண்பாவை பாரதி திருமணம் செய்துகொள்வது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. வெண்பா சொன்ன ஒரே ஒரு பொய்யை நம்பி கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக கண்ணம்மாவை விட்டு பாரதி விலகி இருக்கிறார். அதாவது வருணுக்கும் கண்ணம்மாவிற்கும் சிறு வயதில் இருந்தே தொடர்பு இருக்கிறது என கூறி பாரதிக்கு கண்ணம்மா மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், பாரதியின் DNA ரிப்போர்ட்டை மாற்றி வைத்து பாரதிக்கு மேலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

முடிவை நோக்கி பயணிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – விரைவில் சீசன் 2 அறிமுகம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்த சந்தேகத்தால் தான் இத்தனை வருடங்களாக கண்ணம்மாவை விட்டு பாரதி பிரிந்து இருக்கிறார். மேலும், வெண்பாவை திருமணம் செய்தால் மட்டுமே கண்ணம்மா தன்னுடைய வாழ்க்கையில் இருந்து முழுமையாக செல்வார் என நினைத்து வெண்பாவை திருமணம் செய்ய நினைப்பார். ஆனால் அந்த திருமணத்தை குடும்பத்தினர்கள் கடைசி நேரத்தில் வந்து தடுத்துவிடுவர். தற்போது வரை வெண்பா பாரதியை திருமணம் செய்துகொள்ள திட்டம் போட்டு கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக இருக்கும்படியான சந்தர்ப்பம் அமைந்து வருகிறது.

சன் டிவி ‘நாதஸ்வரம்’ சீரியல் பிரபல நடிகை கூறிய ஷாக் தகவல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இதனால் பாரதியிடம் கண்ணம்மாவை நெருங்கவே விட கூடாது என நினைத்து புதிய திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார். தற்போது வெண்பாவின் அம்மா அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். அவரும் நீ பாரதியை திருமணம் செய்துகொள்ள நினைத்தால் உடனடியாக செய்துவிட்டு வா, இல்லையென்றால் இப்போதே உனக்கு வேறொரு மாப்பிளை பார்க்கிறேன் என கூறுகிறார். இந்நிலையில் பாரதியும் வெண்பாவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டது போல ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here