விவாகரத்து பற்றிய சிந்தனையில் கண்ணம்மா, அஞ்சலியை வற்புறுத்தும் வெண்பா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோட்!

0
விவாகரத்து பற்றிய சிந்தனையில் கண்ணம்மா, அஞ்சலியை வற்புறுத்தும் வெண்பா
விவாகரத்து பற்றிய சிந்தனையில் கண்ணம்மா, அஞ்சலியை வற்புறுத்தும் வெண்பா

விவாகரத்து பற்றிய சிந்தனையில் கண்ணம்மா, அஞ்சலியை வற்புறுத்தும் வெண்பா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோட்!

பாரதியை விவாகரத்து செய்வது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் கண்ணம்மாவிடம், அவரது மனசாட்சி வந்து பேசுகிறது. பிறகு வெண்பா, அஞ்சலிக்கு போன் செய்து அந்த மாத்திரையை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறார்.

பாரதி கண்ணம்மா:

இப்போது வெண்பா கொடுத்த டைவர்ஸ் பத்திரத்தை குறித்து கண்ணம்மா சிந்தித்து கொண்டிருக்கிறார். ஆனால் பொண்ணு முக்கியமா, டைவர்ஸ் முக்கியமா என கண்ணம்மாவின் மனசாட்சி வந்து அவரிடம் பேசுகிறது. அப்போது, குழந்தையை கண்டுபிடிக்க சௌந்தர்யாவிடம் உதவி கேட்குமாறு கண்ணம்மாவின் மனசாட்சி கூற, அதற்கு கண்ணம்மா மறுக்கிறார். பின்பு பாரதிகிட்ட உதவி கேட்கலாம் இல்லன்னா பாரதியை டைவர்ஸ் செய்துவிட்டு அந்த 2 குழந்தைகளையும் அப்பா இல்லாமல் எப்படி வளர்ப்ப என கேட்க, நான் எடுத்த முடிவு தான் சரி என கண்ணம்மா கத்துகிறார்.

சென்னை : சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) விலை மீண்டும் அதிகரிப்பு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

அப்போது தூங்கிக் கொண்டிருக்கும் லட்சுமி வந்து என்னமானு கேட்க அதற்கு சாமி கூட பேசிட்டு இருக்கேன் என கண்ணம்மா கூறுகிறார். பிறகு அஞ்சலி, வெண்பா கொடுத்த மாத்திரை முடிந்து விட்டது அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கிறார். இது வெண்பா கொடுத்த மாத்திரை தான் இந்த மாத்திரையை ஏன் இன்னும் எடுத்துக்கணும், வேண்டாம் என நினைக்கிறார். அப்போது ஹேமா அங்கு வந்து மாத்திரை முடிந்து விட்டதாகவும், புதிய மாத்திரையை அகிலன் வாங்கி கொடுத்ததாக சொல்லி கொடுக்கிறார்.

அப்போது அஞ்சலி, இந்த மாத்திரையை சாப்பிட்டால் மயக்கம் வரும், நெஞ்சு வலிக்கும் என ஹேமாவிடம் கூற, அப்படி இருந்தால் ஏன் அந்த மாத்திரையை சாப்புடுறீங்க என கூறி விட்டு ஹேமா செல்கிறார். பிறகு அந்த மாத்திரையை சாப்பிட வேண்டாம் என கூறி அதை வைத்து விடுகிறார் அஞ்சலி. பிறகு அஞ்சலிக்கு போன் செய்யும் வெண்பா மாத்திரையை போட சொல்லி வற்புறுத்துகிறார். வெண்பா பேசியதை வைத்து அந்த மாத்திரை மீது அஞ்சலிக்கு சந்தேகம் வருகிறது. இப்போது ஹேமாவுடன் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருக்கும் பாரதியை பார்த்த சௌந்தர்யா, கண்ணம்மா குறித்து பாரதி எடுத்த முடிவு பற்றி கேட்கலாம் என நினைக்கிறார்.

தமிழகத்தில் முதன்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

அதற்கு வேணு வேண்டாம் என்று சொல்லி அங்கிருந்து அவரை அழைத்து போகிறார். மறுபக்கத்தில் வெண்பா தனது தோழிகளுக்கு பார்ட்டி கொடுக்கிறார். பிறகு, பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து கடந்த கால நினைவுகளை அசை போடும் கண்ணம்மா, பாரதி இனி மாறப்போவதில்லை என முடிவு செய்து அதனை கிழிக்கப் போகிறார். அப்போது உறங்கிக் கொண்டிருக்கும் லட்சுமி, டாக்டர் அங்கிள் என தூக்கத்தில் உளற அந்த போட்டோவை திரும்ப உள்ளே வைக்கிறார் கண்ணம்மா. இதனுடன் இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடு முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here