பாரதி, கண்ணம்மாவுக்கு ஷாக் கொடுத்த ஜானகி – சீரியலில் அதிரடி திருப்பம்!

0
பாரதி, கண்ணம்மாவுக்கு ஷாக் கொடுத்த ஜானகி - சீரியலில் அதிரடி திருப்பம்!
பாரதி, கண்ணம்மாவுக்கு ஷாக் கொடுத்த ஜானகி - சீரியலில் அதிரடி திருப்பம்!
பாரதி, கண்ணம்மாவுக்கு ஷாக் கொடுத்த ஜானகி – சீரியலில் அதிரடி திருப்பம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இன்றைய எபிசோடில் ஜானகி மற்றும் ராமன் இருவரும் திடீரென காணாமல் போய் மருத்துவமனையில் ஒரு பரபரப்பை உண்டாக்கி விடுகிறார்கள். ஆனால், பாரதி வழக்கம் போல இந்த தவறுக்கு கண்ணம்மா தான் காரணம் என்று பழி சுமத்துகிறார்.

பாரதி கண்ணம்மா:

தற்போது மந்தமாக நகர்ந்து வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இன்றைய கதைக்களத்தில் ஒரு பெரிய களேபரமே நடந்து ஓய்ந்திருக்கிறது. இந்த சீரியலின் சமீபத்திய கதைக்களங்கள் பாரதி மற்றும் கண்ணம்மாவின் நடிப்பை ஓவர் டேக் செய்யும் அளவு துணை கதாப்பாத்திரங்களின் நடிப்புக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரதியின் மருத்துவமனை சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் இப்போதைக்கு ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் மெயின் ஸ்டோரியாக அமைந்துள்ளது.

Exams Daily Mobile App Download

முன்னதாக, உடல் உறுப்பு தானம் பற்றி பேசிய இந்த சீரியலின் கதைக்களம் இப்போது வயதான தம்பதிகளின் தயவால் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இன்றைய எபிசோடில் பாரதியிடம் சிகிச்சை எடுத்து வரும் ஜானகி பாட்டி மற்றும் அவரது கணவர் ராமன் இருவரும் காலார நடந்து சென்றதால் மருத்துவமனையில் ஒரு பூகம்பமே வெடிக்கிறது. இதற்கு காரணம் கண்ணம்மா தான் என பாரதி வழக்கம் போல அவரை குற்றம் சாட்டுகிறார்.

‘ராஜா ராணி’ சீரியல் நடிகையை காதலிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ அருண்? வைரலாகும் புகைப்படம்!

அதாவது, ஜானகி மற்றும் ராமனை காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்க ஒரு வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகிறது. உடனே அது ஜானகி, ராமன் என்று எண்ணிய பாரதி வழக்கம் போல கண்ணம்மாவை திட்டுகிறார். ஆனால், வெளியே நடக்க சென்று மருத்துவமனைக்கு வரும் ஜானகி, கணவர் ராமனிடம் தனக்கு இருக்கும் குறைகளை சொல்லி விட்டதாக கூறுகிறார். இதை அவர் எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறார் என பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பதறுவது போல இன்றைய எபிசோடு வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!