
தீவிரவாதிகளிடம் மாட்டி கொண்ட கண்ணம்மா, காப்பாற்ற செல்லும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ட்விஸ்ட்!
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தீவிரவாதிகள் மருத்துவமனையில் உள்ளவர்களை அடைத்து வைத்திருப்பது போன்ற எபிசோடுகள் வருகின்றது. இந்நிலையில், கண்ணம்மா தீவிரவாதிகளிடம் பொய் சொல்லி மாட்டிக் கொள்வது போல் காட்சிகள் வர உள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தற்போது ஒரே மருத்துவமனையில் சேர்ந்து வேலை செய்வது போன்ற காட்சிகள் வர தொடங்கியதில் இருந்து அவ்வப்போது சுவாரசியமான எபிசோடுகள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது இவர்களது மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக அட்மிட் ஆகப் போவது தெரிந்து தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் மாறுவேடத்தில் நுழைந்து விடுகின்றனர். பின்னர், அங்கிருப்பவர்களை கைது செய்து வைக்கின்றனர். அப்போது, அந்த மருத்துவமனையில் தான் கண்ணம்மா, லட்சுமி, அகிலன் மற்றும் அஞ்சலி ஆகியோரும் மற்றவர்களுடன் மாட்டிக் கொள்கின்றனர்.
இவர்களை காப்பாற்றுவதற்கு காவல்துறையும் நடவடிக்கை எடுத்து வருவது போல் காட்சிகள் வருகிறது. மற்றொரு புறம், கண்ணம்மா உள்ளே மாட்டிக் கொண்டதை நினைத்து சந்தோஷத்தில் வெண்பா ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார். உடனே ரோஹித் உள்ளே, பாரதி செல்ல போகிறார் என்று சொல்லி வெண்பாவை வெறுப்பேற்றுகிறார். இதனால் வெண்பா கோவத்தில் சாப்பிடுவதை தூக்கி எரிந்து கோவப்படுகிறார். மேலும், பாரதிக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று சொல்லுகிறார்.
இந்திய ஐடி நிறுவனங்களின் கதி இது தான்? ஷாக் தகவல்!
மற்றொரு புறம், பாரதியுடன் சேர்ந்து போலீஸ் ஒருவரும் மருத்துவர் போல் வேடமிட்டு அமைச்சருக்கு சிகிச்சை செய்ய மருத்துவமனைக்குள் செல்கிறார். பாரதியை பார்த்து லட்சுமி அப்பா என்று ஓடி செல்ல தடுத்து விடுகிறார்கள். அப்போது, தீவிரவாதிகள் கண்ணம்மாவிடம் கூட வந்திருக்கும் நபரை பற்றி கேட்க, அது எங்க டாக்டர் தான் என்று கண்ணம்மா சொல்லிவிடுகிறார். ஆனால், அதை நம்பாத தீவிரவாதி வேறு நர்ஸிடம் கேட்க, அவர் பயத்தில் உண்மையை சொல்லி விடுகிறார். இதனால் கண்ணம்மாவை அடித்து விடுகிறார்கள். இனி வரப்போகும் காட்சிகள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் அதிக ஆர்வத்தில் காத்திருக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்