“பாரதி கண்ணம்மா” சீரியல் அகிலனாக களமிறங்கியுள்ள நடிகர் சுகேஷ் – சினிமா பயணம்!!

0
"பாரதி கண்ணம்மா" சீரியல் அகிலனாக களமிறங்கியுள்ள நடிகர் சுகேஷ் - சினிமா பயணம்!!
“பாரதி கண்ணம்மா” சீரியல் அகிலனாக களமிறங்கியுள்ள நடிகர் சுகேஷ் – சினிமா பயணம்!!

விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில், புதிதாக அகில் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி உள்ள நடிகர் சுகேஷின் சினிமா பயணம் குறித்து இந்த பதிவில் காணலாம்.

நடிகர் சுகேஷ்:

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையை விட சின்னத்திரை நடிகர்களுக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக உள்ளது. வெள்ளித்திரையில் ஹீரோ ஹீரோயின் மட்டுமே பாராட்டப்பட்டு வரும் நிலையில், சின்னத்திரையில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், துணை ரோலில் நடிப்பவர்கள் புகழின் உச்சிக்கு செல்கின்றனர். விஜய் டிவியில் டாப் சீரியல் வரிசையில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலன் கதாபாத்திரம், கதைக்கு முக்கியமாக உள்ளது. அந்த கதாபாத்திரத்தில் முன்னதாக நடித்த அகில் கடந்த வாரம் திடீரென விலகினார்.

‘பிக்பாஸ் சீசன் 5’ல் களமிறங்கும் விஜே பிரியங்கா? உறுதியான தகவல்!

அவரது அந்த ரோலில் தற்போது புதிதாக சுகேஷ் நடித்து வருகிறார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் திருமதி ஹிட்லர் சீரியலில் கிஷோர் ரோலில் நடித்து பிரபலமானவர். அதில் இவரின் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. இதன் பின்பு தான் விஜய் டிவி இயக்குனர் பிரவீன் மூலம் சுகேஷூக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட நடிகர் சுகேஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

தனது காதல் கணவரை பிரிகிறாரா நடிகை சமந்தா? விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

இந்நிலையில் சினிமா மீது கொண்ட ஆசையால் ஐடி வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு நடிப்பில் இறங்கியவர் இவர். நடிப்பு மட்டுமில்லாமல் இவர் நன்றாக டான்ஸ் ஆட கூடியவர். அகிலன் ரோலில் சுகேஷ் நடிப்பது உறுதியானதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அகிலனை டேக் செய்து போஸ்ட் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் உங்கள் இடத்தை நான் நிரப்ப முயற்சி செய்கிறேன். அகிலன் ரசிகர்களுக்கு கண்டிப்பாக என்னை ஏற்றுக் கொள்வது கஷ்டம் தான். ஆனாலும் என்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் உங்களை மகிழ்விப்பேன் என்று தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!