ஹேமா & லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை உடைத்த சௌந்தர்யா – அதிர்ச்சியில் பாரதி!

0
ஹேமா & லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை உடைத்த சௌந்தர்யா - அதிர்ச்சியில் பாரதி!
ஹேமா & லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை உடைத்த சௌந்தர்யா - அதிர்ச்சியில் பாரதி!
ஹேமா & லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை உடைத்த சௌந்தர்யா – அதிர்ச்சியில் பாரதி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் லட்சுமி, கண்ணம்மாவின் மகள் என்பதை தெரிந்து கொண்ட பாரதி வரும் நாட்களில் ஹேமாவும் கண்ணம்மாவின் குழந்தை என்பதை அறிந்து கொள்ளும் புதிய கதைக்களம் ஒளிபரப்பகலாம் என தெரிகிறது.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கதைக்களம் தற்போது சூடு பிடித்து வருகிறது. கடந்த வாரம் வெளியான எபிசோடுகளில் பாரதி, கண்ணம்மா வீட்டில் தங்கக்கூடிய சூழல் உருவாகிறது. தொடர்ந்து வயிற்று வலியால் துடிக்கும் லட்சுமியை மருத்துவமனையில் சேர்க்கும் பாரதி, கண்ணம்மாவின் குழந்தை தான் லட்சுமி என்பதை கண்டு பிடிக்கிறார். இப்போது லட்சுமியை அவரது வீட்டுக்கு கொண்டு வந்த பாரதி, கண்ணம்மாவை அங்கு வரவழைக்க திட்டம் போட்டுள்ளார். இதை அறிந்த முழு குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கிறது.

75வது சுதந்திர தினம் – கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் முக ஸ்டாலின், ஓய்வூதியம் அதிகரிப்பு!

இதற்கு பின்பாக நடந்தவற்றை பார்த்து சந்தேகிக்கும் கண்ணம்மா, பாரதி வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார். ஒருவேளை அவர் சௌந்தர்யா வீட்டுக்கு வந்தால் கண்ணம்மா தான் லட்சுமின் அம்மா என்பதை பாரதி கண்டுபிடித்து விடுவார். இல்லையென்றால் உண்மையான தகவலை அறிந்த கண்ணம்மா, அவருக்கு பதிலாக வேறு ஒருவரை அனுப்பலாம். இருந்தாலும் லட்சுமி புத்தகத்தில் கண்ணம்மா புகைப்படத்தை பார்த்திருக்கும் பாரதி, கண்ணம்மா வீட்டுக்கு வந்தால் உண்மையை முழுமையாக அறிந்து மீண்டும் பக்கம் பக்கமாக திட்ட துவங்கிவிடுவார்.

கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு உதவும் கதிர், கோபத்தில் மூர்த்தி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

அதோடு நில்லாமல் கண்ணம்மாவை பழி வாங்க வேண்டும் என நினைத்து லட்சுமியை கண்ணம்மாவிடம் இருந்து பிரிக்க முற்படுவார் என தெரிகிறது. இல்லையென்றால் பாரதி, கண்ணம்மா இடையே இருக்கும் விரிசலை சரிபண்ண, வேறு வழியில்லாமல் கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது என்ற உண்மையை சௌந்தர்யா இருவரிடமும் சொல்லி விடலாம். அப்படி சொன்னாலும் பாரதி, கண்ணம்மாவை சும்மா விடப்போவதில்லை. இப்படி பிரச்சனை ஓடிக்கொண்டிருக்க மறுபக்கத்தில் அஞ்சலி உடம்பில் இருக்கும் வருத்தத்தை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – ஆகஸ்ட் 17ம் தேதி ஆலோசனை!

இதனுடன் அஞ்சலிக்கு வளைகாப்பு விழாவும் நடைபெற இருக்கிறது. ஒருவேளை வரும் வாரங்களில் அஞ்சலிக்கு பிரசவ வலி வரலாம். அதற்கு பின்பு தான் அஞ்சலிக்கு இருக்கும் நெஞ்சுவலி பிரச்சனையை பற்றி குடும்பத்தாருக்கு தெரிய வர உள்ளது. அப்போது உயிருக்கு போராடும் அஞ்சலியை காப்பாற்ற கண்ணம்மா முன் வருவார் என தெரிகிறது. இவை எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது இப்போதைக்கு பாரதி, கண்ணம்மா சண்டை, அஞ்சலியின் பிரச்சனை ஆகியவை தான் வரும் வார எபிசோடுகளில் ஒளிபரப்பாக இருக்கிறதாக தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here