லட்சுமியின் அம்மாவை பார்க்க துடிக்கும் பாரதி, அறியாமல் வீட்டுக்கு வரும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!

0
லட்சுமியின் அம்மாவை பார்க்க துடிக்கும் பாரதி, அறியாமல் வீட்டுக்கு வரும் கண்ணம்மா - 'பாரதி கண்ணம்மா' ப்ரோமோ!
லட்சுமியின் அம்மாவை பார்க்க துடிக்கும் பாரதி, அறியாமல் வீட்டுக்கு வரும் கண்ணம்மா - 'பாரதி கண்ணம்மா' ப்ரோமோ!
லட்சுமியின் அம்மாவை பார்க்க துடிக்கும் பாரதி, அறியாமல் வீட்டுக்கு வரும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!

‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய ப்ரோமோவில் மருத்துவமனையில் இருந்து லட்சுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்த பாரதி, லட்சுமியின் அம்மா, அப்பாவை பார்க்க வேண்டும் என அடம் பிடிக்கிறார். லட்சுமியை கூட்டி செல்ல வரும் கண்ணம்மாவிடம் பாரதி கேள்வி கேட்க செய்வதறியாது திகைத்து நிற்கிறார் அவர்.

புதிய ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரின் இந்த வாரத்துக்கான புதிய ப்ரோமோ ஒன்று பரபரப்பான திருப்பங்களுடன் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த வாரம் வெளியான எபிசோடில் வயிற்று வலியால் துடிக்கும் லட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பாரதிக்கு, கண்ணம்மா தான் லட்சுமியின் அம்மா என்ற விஷயம் தெரிய வருகிறது. இந்த தகவலை உறுதி செய்ய நினைக்கும் பாரதி மயக்கத்தில் இருக்கும் லட்சுமியை தனது வீட்டுக்கு தூக்கி கொண்டு போகிறார்.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இதையடுத்து இன்று வெளியாகி இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோவில், திடீரென குழந்தையோடு வீட்டுக்கு வந்த பாரதியிடம் குடும்பத்தினர் என்னவென்று விசாரிக்க, கண்ணம்மா மகள் தான் லட்சுமி என்று தான் கண்டுபிடித்த உண்மையை மறைத்து, லட்சுமியின் அம்மாவை பார்க்க வேண்டும் என கூறுகிறார். எதற்கு தேவையில்லாமல் அடுத்தவர்களின் குழந்தையை இப்படி நம்ம வீட்டுக்கு கொண்டு வர்ர என கேட்கும் சௌந்தர்யாவிடம், எனக்கு லட்சுமியின் அம்மா, அப்பாவை பார்க்க வேண்டும் என பாரதி உறுதியாக நிற்கிறார்.

அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் RBI முக்கிய எச்சரிப்பு – ஆன்லைன் மோசடி!

அப்போது அங்கு வரும் கண்ணம்மா, நடந்ததை அறியாமல் லட்சுமி எங்கே என கேட்க, உண்மையை கூறி விடுவாளோ என்று எண்ணி சௌந்தர்யா கலங்குகிறார். ஆனால் பாரதி, உங்களுக்கும் லட்சுமிக்கும் என்ன தொடர்பு, அவளோட அம்மா, அப்பா வந்தால் தான் லட்சுமியை ஒப்படைக்க முடியும் என கண்ணம்மாவிடம் கூறுகிறார். இதற்கிடையில் மயக்கமாக இருக்கும் லட்சுமி கண் முழித்து விடுகிறார். இப்போது லட்சுமி வந்து கண்ணம்மா தான் அம்மா என்று உண்மையை சொல்வாரா என்ற விறுவிறுப்பான கதைக்களத்துடன் வரும் வார எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!