‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடிக்க இருந்த இயக்குனர் பிரவீன் பென்னட்டின் மனைவி? வைரலாகும் ஃபன் வீடியோ!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் கண்ணம்மாவாக நடிக்க இருந்த இயக்குனர் பிரவீன் பென்னட்டின் மனைவி? வைரலாகும் ஃபன் வீடியோ!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடிக்க இருந்த இயக்குனர் பிரவீன் பென்னட்டின் மனைவி? வைரலாகும் ஃபன் வீடியோ!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா கதாப்பாத்திரத்துக்கு ரீபிளேஸ்மென்ட் ஆக இயக்குனர் பிரவீன் பென்னட்டின் மனைவி நடிகை சாய் பிரமோதிதா தானே நடிப்பதாக கூறியதாக வெளியான ஃபன் இன்டெர்வியூ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்து வருகிறது. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கிட்டத்தட்ட 670 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த சீரியல் துவங்கிய ஆரம்ப கட்டத்தில் இருந்து மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் இத்தொடரில் கண்ணம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினி திடீரென சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொங்கல் தொகுப்பு புகார் தெரிவிக்க வசதி!

இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் முக்கிய தூணாக கருதப்பட்டு வந்த கண்ணம்மா கதாப்பாத்திரம் ஒரேடியாக சீரியலை விட்டு விலகுவது பெரிய இழப்பை கொண்டு வரும் என்று கணித்திருந்த நிலையில், புதிய கண்ணம்மாவாக வினுஷா என்பவரை அறிமுகம் செய்து வைத்து மக்களிடம் பாராட்டுகளை பெற்றிருப்பவர் இயக்குனர் பிரவீன் பென்னட். விஜய் டிவியின் பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கி இருக்கும் பிரவீன் பென்னட் இந்த கண்ணம்மா கதாப்பாத்திரத்தை மாற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

அதில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவை கண்டுபிடிப்பதற்கு பல கட்டமாக தேடல்கள் நடைபெற்றது. சீரியல் குழுவினர் தவர மொத்த சேனலும் புதிய கண்ணம்மாவை தேடி வந்தனர். இந்த இக்கட்டான சூழலில் கண்ணம்மாவாக நடிப்பதற்கு மனைவி சாய் பிரமோதிதா தயாராக இருந்ததாகவும் ஜாலியாக குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து ‘ராஜா ராணி 2’ சீரியலில் ஆலியா மானஸா கர்ப்பம் குறித்து பேசிய பிரவீன், நான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்காக புதிய கண்ணம்மாவை தேடிக் கொண்டிருந்த போது ஆலியா தனது கர்ப்பம் குறித்து என்னிடம் பேச வந்தார்.

Vijay TV Bigg Boss 5 Promo | மல்லிகை பூ உடன் வந்த தாமரையின் மகன்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஆனால் நான் கொஞ்சம் பரபரப்பாக இருப்பதை பார்த்து விட்டு பல நாட்கள் சொல்லாமலேயே சென்றிருக்கிறார். ஒரு முறை கண்ணம்மாவாக தேர்வு செய்யப்பட்ட நடிகையின் புகைப்படத்தை ஆலியாவிடம் காட்டும் போது தான் அவர் அந்த விஷயத்தை தயங்கியபடியே சொன்னார். இதற்காக ‘ராஜா ராணி 2’ சீரியலில் சில மாற்றங்களை செய்ய ஆலோசித்து வருகிறோம் என்று கலகலப்பாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!